Tuesday, September 30, 2008

Exclusive: இப்போது கட்சி ஆரம்பித்தால் ஆட்சியைப் பிடிப்பாரா ரஜினி?

இதற்கான பதிலை நாமே சொன்னால் அது ரஜினி மீதுள்ள ப்ரியத்தில் கூறியதாகத்தான் நமது நண்பர்களே நினைப்பார்கள்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?

இதோ அரசியல், வணிகம், சினிமா என பல துறைகளைச் சேர்ந்த ஒரு 10 விஐபிக்களிடம் நான் நேரடியாகப் பேசியவற்றிலிருந்து இந்தக் கேள்விக்கான பதிலாய் தருகிறேன்!

சு.திருநாவுக்கரசர் – பாஜக தலைவர்

அவர் எப்போதோ கட்சி ஆரம்பித்திருக்க வேண்டியவர். ஆனால் பல காரணங்களால் அது இன்னமும் நடக்கவில்லை. இன்றைய சூழலில் கூட முதல்வர் பதவிக்கான் வேட்பாளர் என்று அவர் தன்னை முன்னிறுத்தி மக்களைச் சந்தித்தால் தமிழ்நாட்டு அரசியலே தலைகீழாகிவிடும். ஆனால் செய்வாரா... தெரியவில்லை.
அவர் சொல்வதுபோல காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.

பி.வாசு – இயக்குநர்

ரஜினி சார் இன்னும் அரசியல் பத்தி வெளிப்படையா எதுவும் அறிவிக்கல. அதனால் நானும் ஓபனா பேச முடியாது. ஒருவேளை ஆரம்பிச்சார்னா, நிச்சயம் தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் சக்தியாக அவர் இருப்பார். இப்போதே அவர் அப்படித்தான் இருக்கிறார் என நம்புகிறேன்.

எனக்கென்னமோ அவர் மிகப்பெரிய உயரத்தைத் தொடப் போகிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது. பார்க்கலாம்!

சோ – பத்திரிகையாளர்

எதுக்கு இப்போ இந்தக் கேள்வி?

அவர் முதலில் தன்னைத் தயார்படுத்திக்கிட்டு வரட்டும் சொல்றேன்.... இன்னொன்னு நான் யாரை பாராட்டுகிறேனோ அவர்கள் பெருசா வர்றதில்லை. அதனால இனி ரஜினியை நான் பாராட்டப் போறதில்லை. கடுமையா விமர்சிக்கப் போறேன்.

அப்பதான் அவர் எம்ஜிஆர் மாதிரி முதல்வர் ஆகி இன்னும் என்னோட விமரிசனங்களுக்கு ஆளாவார்னு நம்பறேன்...!!

மோகன்பாபு – நடிகர்

ரஜினி அரசியல் கட்சி தொடங்கி ஒரு வருஷம் கடுமையா கவனம் செலுத்தினாலே போதும், இந்த தமிழ்நாட்டின் அதிகாரம் அவர் கைக்கு வந்துடும்.

நான் பலமுறை அவன்கிட்ட சொல்லியிருக்கேன்...

‘டேய் கட்சி ஆரம்பிச்சு, இந்த ஜனங்களுக்கு இன்னும் நிறைய செய்டான்னு... ஆந்திரா அரசியல்ல நான் ஒரு எம்பியாக இருந்தேன். அவ்வளவுதான். அங்க பெருசா செய்ய முடியல. ஆனா ரஜினி கட்சி ஆரம்பிச்சான்னா உச்சத்துக்குப் போவான். இது அவன் ராசி. சினிமாவில் இப்போ அவன்தான் முதல்வர். அரசியலிலும் இது நிச்சயம் நடக்கும்... அப்போ இந்த மோகன்பாபுவை நினைச்சுக்கங்க.

எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தான்னா... நான்கூட அவன் கட்சியில சேர்ந்துருவேம்பா... ஜோக் இல்ல.. சீரியஸாதான் சொல்றேன். எனக்கும் தமிழ்நாட்டுல செட்டில் ஆகற ஆசையிருக்கு!

எஸ்பி முத்துராமன் – இயக்குநர்

நான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்குவேன்னு நினைச்சீங்களா... மாட்டேன்.

கட்சி ஆரம்பிச்சு முழுசா இறங்கினார்னா, ஒரு முதல்வரை வைத்து அதிகப் படங்களை இயக்கியவன் என்ற பெருமை எனக்குக் கிடைக்கும். ஆனா அவர் இயல்புக்கு அரசியல் சரிப்படுமா என்பதை அவர்தான் தீர்மானிக்கணும்.

உங்க கேள்விக்கு பதில் கிடைச்சுடுச்சா....!

வெங்கட் பிரபு – இயக்குநர்

சார் கட்சி ஆரம்பிச்சா நிச்சயம் ஜெயிப்பார். ஆனா எங்களுக்கு சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டாரான ரஜினி சாரும் வேணுமே... அதான் பிரச்சினை. என்னை மாதிரி உள்ளவர்கள் ரஜினியை அரசியல்ல பெரிய தலைவரா பார்க்கவும் ஆசைப்படறோம், சினிமாவில சூப்பர்ஸ்டாரா இருக்கணும்னும் ஆசைப்படறோம்.

பேராசைதான்... ஆனா சார் விஷயத்தில அந்த அளவெல்லாம் கிடையாது.

வடிவேலு - நடிகர்

‘பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு... அதை விட்டுட்டு இந்த புனிதமான அரசியலை ஏன்யா பயன்படுத்தறீங்க!’-ன்னு தன்னோட படத்துல கேட்டவர் அண்ணன் சூப்பர்ஸ்டார்.
எனக்கு ஒரு பிரச்சினை வந்த உடனே நான் கட்சி ஆரம்பிப்பேன், தேர்தல்ல நிப்பேன்னு கொதிச்சிட்டேன். நான் கண்டிப்பா தேர்தல்ல நிப்பேன். அதுல மாற்றமில்ல.

ஆனா எவ்வளவோ சோதனைகளுக்குப் பின்னும் அமைதியா, தன் வழியில போயிட்டிருக்கிற ரஜினி சாரை நினைச்சா எனக்கு பிரமிப்பா இருக்கு. இப்படியொரு மனுஷன் அரசியலுக்கு வரணும்... நிறைய செய்யணும்.

அன்புமணி – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. எந்தக் கொள்கையுமில்லாமல், வெறும் நடிகர் என்ற புகழை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
ரஜினி வரட்டும்... தன் கொள்கைகளைச் சொல்லட்டும். அவற்றுக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அவரது அரசியல் வெற்றி அமையப்போகிறது.

தங்கராஜ் – ஐஏஎஸ் அதிகாரி

நல்ல விஷயம்தான். நான் அரசியலுக்கும் அப்பாற்பட்டு ரஜினியை விரும்புகிறேன். அவரது கொள்கைகளும், மக்களிடம் அவரது அணுகுமுறையையும் பொறுத்து அவரது அரசியல் வெற்றி அமையும். மற்றபடி நான் அரசியல் பேசக்கூடாது.

தொல் திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள்

அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர் என்பதை விடுத்துப் பேசுகிறேன்... ரஜினியின் இயல்புக்கு அரசியல் சரிப்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. மற்றபடி நல்ல மனிதர்.
அவருக்கு அரசியல் களப்பணி தெரியாது. அவர் கட்சி ஆரம்பித்து களத்துக்கு வந்தால்தான் எதையும் கூறமுடியும். மீடியா பிம்பத்தையும் உங்களைப் போன்ற பத்திரிகையாளர் யூகங்களையும் மட்டுமே வைத்து நான் எந்தக் கருத்தைச் சொல்வது?

ரஜினி இதுவரை அரசியலில் இல்லை. அவர் அரசியலில் இறங்கட்டும், வெற்றி வாய்ப்பு குறித்துப் பிறகு பேசலாம்.

15 comments:

Anonymous said...

அட அட்டகாசம் சார். அமர்க்களமா இருக்கு. படிக்கவே அவ்ளோ சந்தோஷமா இருக்கு. இப்போ இதைவிட பெட்டரா நான் ஒரு பதிவை தரனுமே? கஷ்டம்தான்!!

இந்த மேட்டர் மீடியாவுல பெரிசா வந்த நல்ல இருக்கும். அனுமதித்தால் முயற்சி என் பங்கிற்கு செய்கிறேன்.

- சிம்பிள் சுந்தர்

Anonymous said...

Hi Friend,
Fanstic ...... You show the way for these deviant media how should be a news..!

Anonymous said...

என் கருத்துக்கள் அந்த தண்ட‍ முண்ட மலர் பத்திரிகைக்கு! அந்த லொயொலா லொள்ளு, வந்தவன் போனவன் சொல்கிற விசயத்த பற்றி தான்... ரஜினி ரசிகர்களை அல்ல...(ஒரு சிலர் தேவைக்கு அதிகமான எதிர்ப்பார்ப்பை வளர்த்துக்கொண்டுள்ளனர் என்பது உண்மைதான்). ரஜினிக்கு பத்திரிகைகள் 'திரைமறை காரணங்களுக்காக ' நெருக்கடியை ஏற்படுத்துவது போல தலைவரின் ரசிகர்களும் செய்யக்கூடாது.. நல்லது செய்ய அரசியல் மட்டுமே வழியல்ல!!! அப்படி ரஜினி வந்தால் என் ஒட்டும் என்னால் முடிந்த வரை என்னைச்சார்ந்தவர்களின் ஒட்டும் ரஜினிக்கு மட்டுமே! அதுவும் 8 மணிக்கே சென்று ஒட்டு போடுவேன். அது ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினி வர வேண்டும் , வந்தே ஆக வேண்டும் என்று அவரை எந்த விதத்திலும் நிர்பந்தபடுத்தமாட்டேன். அப்படி நிர்பந்தபடுத்த ரஜினியும் விட மாட்டார், நிர்பந்த படுத்த யாருக்கும் தகுதி கிடையாது. வாழ்க ரஜினி மேஜிக்! - Raj T

Anonymous said...

அவர் கட்சி ஆரம்பித்து, விஜயகாந்த் எதிராக வடிவேலை நிற்க வைத்து, விஜய்காந்தை தோற்கடிக்கவேண்டும்.

Regards,
Nandakumar G.

Anonymous said...

HATS OFF Mr.Vinojasan ORU PATHRIKAIYALAN SEIYA VENDIYATHAI,MUDIYATHATHAI NENGAL
SEITHIRUKIRirkal.
ULAMARTHA valthukal.
Mekaiyaka thondralam LATHA RAJINI
KUDA unga(vinojasan) alavukum,sundarji(onlyrajini.com)
alavukum thalaivar patriey yosiparkala endru theriavillai!
valarka ungal pani!

Unknown said...

Really cool one....I cant trust myself by reading the words of Anbumani & Thiruma....If its true, really good...becoz thiruma was the one who scolded our thalaivatr earlier...

I also share the same view as Cho...wenever he appreciates one, nobody else does the same...its better he critize us & Thalaivar...

Anonymous said...

good idea from sundar.why dont we publish it in the media

suki said...

unga selection super , vithyasamana pala per oda opinion kekaradhuku acharyamagavum, sandhoshamagavum ulladhu, niramba magizhchi

Abu said...

சூப்பர் தலைவா ! கலக்கல் கவரேஜ் !

அன்புடன்

அபுதாகீர் - துபாய்
www.therajinikanth.blogspot.com

Anonymous said...

Excellent post.. Infact we had a similar discussion in our office bus today after seeing Dinathanthis news on Thalaivars political entry. No need to say... Everybody wish SS to come to politics and willing to vote for him alone..

Anonymous said...

suki avargal sonna maathiri unga selection sooper.

padikkum bothu manasukku nalla santhoshama irunthathu.

Ungal muyarchikku en paaraattukal.

Anonymous said...

…(ஒரு சிலர் தேவைக்கு அதிகமான எதிர்ப்பார்ப்பை வளர்த்துக்கொண்டுள்ளனர் என்பது உண்மைதான்). ரஜினிக்கு பத்திரிகைகள் ‘திரைமறை காரணங்களுக்காக ‘ நெருக்கடியை ஏற்படுத்துவது போல தலைவரின் ரசிகர்களும் செய்யக்கூடாது.. நல்லது செய்ய அரசியல் மட்டுமே வழியல்ல!!! அப்படி ரஜினி வந்தால் என் ஒட்டும் என்னால் முடிந்த வரை என்னைச்சார்ந்தவர்களின் ஒட்டும் ரஜினிக்கு மட்டுமே! அதுவும் 8 மணிக்கே சென்று ஒட்டு போடுவேன். அது ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினி வர வேண்டும் , வந்தே ஆக வேண்டும் என்று அவரை எந்த விதத்திலும் நிர்பந்தபடுத்தமாட்டேன். அப்படி நிர்பந்தபடுத்த ரஜினியும் விட மாட்டார், நிர்பந்த படுத்த யாருக்கும் தகுதி கிடையாது. வாழ்க ரஜினி மேஜிக்! Raj T

Anonymous said...

மிக நல்ல பதிவு வரவேற்க தகுந்த முயற்சி.ஆனால் கருத்துகளை கேட்ட நீங்கள் பலவாராக சமுகத்தின் மேல்தட்டு அல்லது அரசியல் சார்பு உடையவர்களிடம் கேட்டுஇருகிறீர்கள்.(ஓர் இருவரை தவிர்த்து) மற்றவர்கள் எல்லோருக்கும் ரஜினி என்னும் மந்திரத்தின் ஆதரவு அல்லது நட்பு அரசியல் ரீதியாகவே தேவைபடுவது மறுக்கமுடியாது பொதுமக்கள் கருத்தை கேட்டு வெளியிட்டால் இன்னும் நன்றாக இர்ருக்கும் இதை ஏன் கூறுகின்றேன் என்றால் நானும் இவர்களை போல தான் நினைத்தேன்.இந்த பதிவில் வந்த கேள்வியும் அதற்கு இந்த பதிவாளர் தந்தபதிலும் படிக்கும் வரை
http://jayasreesaranathan.blogspot.com/2008/09/vishnu-at-thailand-airport_29.html
நாம் சந்திக்கும் நடுத்தரவர்க்க மக்களின் சிந்தனை-ஐ பிரதிபலபதாக உள்ளது.எந்த ஒரு நிகழ்வுக்கும் பலபக்க நியாயங்கள் உள்ளன அது சரியா இல்லை தவறா என்று காலம் தான் தீர்மானிக்கும் .இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ரஜினி-ஐ அரசியலில் இழுக்க முயற்சி செய்யும் ரசிகர்கள் மாற்று கருத்துகளையும் செவி கொடுத்து கேட்டு நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கருத்துகளை பதிவு செய்தால் அவர் அரசியலுக்கு வரவேண்டுமா என்பதை அவர்கள் தீர்மானிக்க உதவும் அல்லது அவ்வாறு ஒருவேளை அவர் வரவேண்டும் என்று மக்கள் நினைத்தா அதை அவரை ஒப்புக்கொள்ள வெயிக்கவும் முடியும்

Anonymous said...

ரஜினியை நிர்பந்தபடுதுவதை விட, அவரே வியக்கிற அளவுக்கு , நம் நண்பர்கள் 'மரம் நடுதல்' ஏன் செய்வதில்லை?? இத மிகவும் சீரியசா எடுத்து ஒரு பதிப்ப போடுங்களேன்... (1.) ரஜினி பிறந்த நாளுக்கு ஐம்பது லட்சம் மரங்கள்!! (2.)எந்திரன் ரிலீசுக்கு ஒரு கோடி மரங்கள்!!!! இத ரொம்ப அக்கரையோட, சீரியசா செய்யணும்.... எல்லோரும் மதிப்பாங்க. நமக்கும் ஒரு ஆத்ம திருப்தி!! இந்த வருசம் இத செய்ய முடியுமா?? இத மிகவும் சீரியசா எடுத்து ஒரு பதிப்ப போடுங்களேன்... வசதி இருக்கிறவங்க செடிகள் வாங்கி கொடுக்கட்டும், நேரம் இருக்கிறவங்க நேரத்தை கொடுக்கட்டும்... அதுவும் இப்ப குளிர்காலம் என்பதால் செடிகள் வாடிப்போகாது! "தாயுக்கும் தாயான பூமி, அது தானே நம் எல்லோருக்கும் சாமி...." அதனாலதான் சொல்றேன்.. இத ஒரு மானில, தேசிய அளவில் நம்ம சார்பாக செய்யமுடியுமா??

Vishwa said...

excellent post....forget about rajini baiters...rajini still can manage to wrest the power if he plunges himself full-flegedly into the politics....Rajini can do that...


great contribution by you..really appreciate that...

anbudan...
Vishwa