சற்றுக் கடினமான மனதுடன் இந்தப் பதிவைத் தருகிறேன். புரிந்தவர்கள் கோபப்படாமல் சிந்திக்கட்டும். மற்றபடி எந்தப் பலனும் எதிர்பாராமல் ரஜினி என்ற ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட ரசிகர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!
ரஜினியை அரசியலுக்கு வாருங்கள் என அழைக்க இதுவே சரியான தருணம் என வாதிடும் ரசிகர்கள் ஒருபக்கம்...
வேண்டாம்... அவர் இஷ்டப்படி விட்டுவிடுவோம். ரஜினி என்ற பிம்பத்தை மட்டும் ரசித்து மகிழ்வோம் என அறிவுபூர்வமாக பேசும் கூட்டம் இன்னொரு பக்கம்.
தாமாகவே ஒரு முடிவெடுத்து அந்த முடிவு நிறைவேற வழியில்லாத நிலையில் தாங்களாகவே எதிர்மறையாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள் என மேதாவித்தனம் காட்டும் விமர்சகர்கள் இன்னொரு கூட்டம்.
இதுதான் ரஜினி ரசிகர்கள் என்ற சமூகத்துக்குள் இன்று நிலவும் முரண்பாடு.
இந்த முரண்பாடு அந்த சமூகத்துக்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் சிலர் தங்கள் எழுத்து வல்லமையைக் காட்டுவதாக எண்ணி மீடியாவில் வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவேளை இது ரஜினிக்கு எதிராக வேலை செய்யும் கூட்டத்தின் பிரச்சாரமாகவும் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் சந்தோஷமே... குறைந்தபட்சம் ரஜினி ரசிகர்களுக்குள் எந்த கருத்து பேதமுமில்லை என்ற சந்தோஷமாவது மிஞ்சும் சத்தியநாராயணா போன்றவர்களுக்கு!
ஒவ்வொரு முறையும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பது தவறா... இந்தக் குரலின் பின்னணியில் இருப்பது அரசியல் வியாபாரமா... ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வைத்து லட்சக் கணக்கில் சம்பாதித்துவிடத் துடிக்கிறார்களா ரசிகர்கள்?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளில் கொஞ்சம் கசப்பு தட்டினாலும், உண்மை உண்மைதானே!
இவற்றைப் பற்றி தீவிர பார்வையில் எழுதத் தொடங்கினால் பல ரசிகர்களால் மட்டுமல்ல... இன்று அறிவுஜீவித்தனம் பேசும் ஒருவராலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு கட்டத்தில் ரஜினி என்ற நல்ல நடிகரை, மனிதரை ரசிக்க முடியாத அளவுக்குக் கொண்டு போய்விட்டுவிடும் இந்த விவாதம்!
ஆரவாரம் இருந்தால்தான் திருவிழா!ரசிகர்கள் பாலாபிஷேகம், பீரபிஷேகமெல்லாம் செய்யக் கூடாது. கட் அவுட் வைக்காமல், பேனர் கட்டாமல், பூமழை தூவாமல் அமைதியாக ரஜினி படத்தை ரசிக்க வேண்டும் என அறிவுரைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
குறைந்த பட்சம் இப்படியொரு சூழலில் அடுத்த வருடம் அமைதியாக எந்திரன் ரிலீசானால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்?
பட்டாசு கொளுத்தாமல், வாண வேடிக்கை இல்லாமல், தீப அலங்காரம் செய்யாமல், ஊர்கூடி வடம் பிடிக்காமல் ஒரு திருவிழா நடந்தால் எப்படி இருக்குமோ அப்படியாகிவிடும்!!
அப்படியொரு சூழல் நிலவும் போது, ‘என்ன ஆச்சு... ரஜினி படமா இது... ரசிகர்களுக்குப் பிடிக்காத மாதிரி எடுத்துவிட்டார்களே!’ என விமர்சனம் வைப்பவர்கள் நிச்சயம் இதே கூட்டத்தினராகத்தான் இருப்பார்கள். ‘ரஜினி தன் ரசிகர்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்’ என்பதற்கான அறிகுறி இது என கூலாகச் சொல்லிவிட்டுப் போவார்கள்.
ரஜினி படம் ரிலீசாவது ஒரு திருவிழா மாதிரி என எழுதிக் கிழிக்கும் யாருக்கும், அந்தத் திருவிழாவை யார் தயவுமின்றி சுயமாக நடத்தும் ரசிகர்களைப் பற்றிக் குறை சொல்லும் யோக்கியதை கிடையாது. எங்கோ ஒரு சில ரசிகர்கள் வரம்பு மீறியிருக்கலாம்... ஆனால் பரந்து விரிந்த சமுத்திரத்துக்குள் செம்மீனும் உண்டு, காதறுந்த செருப்பும் உண்டு.
ரஜினியும் அரசியலும்!பின்னாளில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே எந்தத் தொண்டனும் பாலாபிஷேகம் செய்யவில்லை. திரைக்கு முன்னால் சில்லறையை வாரி இறைக்கவில்லை. ஆனால் அந்தத் ரசிகனுக்குத் தொண்டனாகும் ஆசையைத் தூண்டிவிட்டது யார்? பல ரசிகர்களால் வெளிப்படையாகக் கேட்க முடியாத கேள்வி இது! ஆனால் இதற்கான பதில் ரஜினி உள்பட அனைவருக்கும் தெரியும்.
ரஜினி அரசியல் ஆசை துறந்தவரல்ல... அரசியலை இதற்கு முன் முயற்சித்துப் பார்க்காதவருமல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் தானும் ஒரு சக்தியாக அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தே வந்திருக்கிறார். இதை அவர் மறைக்கவில்லை. அதன் தாக்கம் அவரது ரசிகர்களிடமும் இருப்பது இயல்புதானே!
யாருக்கும் கிடைக்காத மக்கள் ஆதரவு எனும் அரிய வரம் ரஜினிக்கு மட்டும்தான் தானாகத் தேடி வந்தது. மூப்பனார் எனும் நியாயமான மனிதர் ஆதரவும் இருந்தது. ஆனால் அதையெல்லாம் திமுகவுக்கு வாரி வழங்கியவர் நமது ரஜினிதான்.
ரஜினிக்கு அரசியல் விருப்பமே இல்லை என்று வாதாடுபவர்களுக்காகத்தான் இதையெல்லாம் இங்கே குறிப்பிடுகிறேன்.
இன்றும் கூட எந்த தொலைக்காட்சி அல்லது பத்திரிகைப் பேட்டியிலும், தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதில்ல. ரசிகர்கள் வீணாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். அவரவர் வேலையைப் பாருங்கள். படம் வந்தால் ரசித்துவிட்டுப் போங்கள், என்று ரஜினி நேரடியாக பொட்டிலடித்த மாதிரி சொல்லவில்லை.
குசேலன் ரிலீசுக்கு இரு வாரங்களுக்கு முன் கைரளி டிவிக்கு அளித்த பேட்டியில் தனது அரசியல் பிரவேசத்தைக் காலம் முடிவு செய்யும் என்றுதான் அவர் கூறியுள்ளார்.
எனவேதான் வெறும் சூப்பர் ஸ்டார் என்ற நிலையைத் தாண்டி அவரை தலைவர் என விளித்து மகிழ்கிறார்கள் ரசிகர்கள். இதில் எங்கே தவறு வந்துவிட்டது?
ரஜினியின் இந்த மனநிலைக்கு எதிராக ரசிகர்கள் அமைதி காத்திருந்தால், அது ரஜினியின் செல்வாக்கை அல்லவா கேள்விக் குறியாக்கியிருக்கும்? கிட்டத்தட்ட அவரை அவமானப்படுத்துவதற்குச் சமானமாகிவிடும்.
இன்னொன்று, எல்லா ரசிகர்களும், தொண்டர்களும் அமைதியாக நன்கு சிந்திப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகை புத்திசாலித்தனம் என்று புரியவில்லை!
ஒவ்வொருவர் பார்வையும் வேறு வேறு கோணத்தில்தான் இருக்கும். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதிலேயே ஆயிரம் பேர் ஆயிரம் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கவில்லையா... அப்படித்தான்.
தனக்குப் பிடித்த நாயகன் தலைமைப் பொறுப்புக்கு வந்து இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தன் கைக்காசை செலவழித்து போஸ்டர் அடிப்பவர்கள் மீது என்ன தவறு கண்டு விட்டார்கள் இவர்கள்?
இப்படி செலவழித்ததை திரும்ப எடுக்க வேண்டும் என்ற ஊழல் சிந்தனையோடேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் அடிமட்ட ரசிகர்கள் கிடையாது, அனைத்தும் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளும் அறிவு ஜீவிகளே!
இது ரஜினிக்கும் தெரியும். அதனால்தான் தன் ரசிகர்களிடம் அவர் கோபப்படுவதில்லை.
ரஜினியின் மன நிலை புரியாமல் ரசிகர்கள் அவரை நிர்பந்தப்படுத்துவதாக சிலர் விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் ரஜினியின் மனம் புரிந்துவிட்டதா என்ன... பிரதமரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ‘நான் அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தீர்மானிக்கட்டும்’ என்கிறார் ரஜினி.
இவர்களோ... ரஜினிக்கு அரசியல் பிடிக்காது. அவர் வழியில் அமைதியாக எளிமையாக வாழ்ந்து, விதவிதமாக ஸ்டைல் காட்டி தங்களை மகிழ்வித்து ரிட்டையர் ஆனால் போதும் என்கிறார்கள்.
இதை எடுத்துச் சொல்பவர்களுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ என்று பட்டம் வேறு...
ரொம்ப்ப கஷ்டம்யா...!
குறிப்பு: ரசிகர்கள் ஏன் ரஜினியை திரும்பத் திரும்ப அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் அடுத்த பதிவில்... சொல்லப் போனால் இதை எழுதியது மட்டும்தான் நான். கருத்து சொன்னவர்கள் திருவாளர் பொதுஜனம்!
7 comments:
Fantastic write-up Vino! Raj T.
Friend,
The attitude here is to show that their say is the final verdict. When person like Rajini is so mighty, each one is trying to view him on their own way as much they can see him. It is none other but the blind men trying to assess an elephant.
Basic need is here the citizen rights which each person has to hold dear to heart. There will be a group who will never vote in the general elections but analyse the policies and politics are also dump and useless. But as every body declares India is a big Republic country so every one is "Talking" because they can not "act" to show they re genius.
1996 க்கு முன்னாடியே ரசிகர்கள் எப்படி பட்த்தை தீபாவளி மாதிரி கொண்டாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் சொல்வது போல் எந்த ரசிகனும் எதையும் எதிர்பார்த்து ரசிக்கவில்லை. ரஜினியை திட்டி பார்த்தார்கள். தலைவர் கண்டு கொள்ளவில்லை. இப்போது ரசிகர்களை குறைகூறுகிறார்கள். ரஜினி நாளை அரசியலுக்கு வந்தாலும் முதல் ஆளாய் ஓட்டு போடுபவனாக மட்டும் தான் ரஜினி ரசிகன் இருப்பான்.
நன்றி... ராஜா. நிஜமான ரசிகனின் எல்லை அவ்வளவுதான். அதற்கு மேல் அவன் உரிமை கொணாடாடுவதும் இல்லை. ஆனால் இன்று ரஜினியை நிர்பந்தப் படுத்துவதாக ரசிகர்களைக் குறைகூறும் சிலர்தான், நாளை ரஜினி ஏதாவது ஒரு முக்கிய முடிவெடுக்கும்போது கூடவே ஒட்டுண்ணிகளாய் இருக்கப் போகிறார்கள்.
நன்றி ராஜ் மற்றும் அனானி!
You are doing great job. Your contribution to www.rajinifans.com will be useful to millions of fans. Pls contact Ramki from Rajinifans.com
vino, I'm a regular visitor to your blog, but I never commented here. I guess this is my first comment here.
I too read somewhere that, few peoples trying to divide Rajini fans unity by calling people like you and Sundar as unannounced PRO's. Please don't consider their words.
You people are acting as bridge between Rajini and his true fans like us. You are writing for us not for those who claiming them as intellectual, but the truth vary.
Please don't stop writing, actually I feared since you haven't posted any posts for last 3 or 4 days, I have checked your blog daily.
I,and millions of true fans always with the people who are real well-wishers of superstar like you, Sundar or Rajinifans.com.
Let the good man rule us.
- Sakthi
மிக அருமையான ஆணித்தரமான பதிவு. பல எண்ணற்ற ரசிகர்கள் சார்பாக உங்களுக்கு என் நன்றி. அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
- சிம்பிள் சுந்தர்
Post a Comment