Friday, October 10, 2008

'எந்திரன்' போட்ட ஆட்டோகிராஃப்...!


எந்திரன் கோவா படப்பிடிப்புக் காட்சிகள் தொடர்பான மேலும் சில புகைப் படங்களை நண்பர் அனுப்பியிருந்தார். இங்கே நீங்கள் பார்ப்பது அவற்றைத்தான்.

எந்திரன் படப்பிடிப்பு நடக்கும் ஒரு ரிசார்ட் வளாகத்தில், படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினி ஓய்வாக அமர்ந்திருக்கும் காட்சி இது.

ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் ஆடிப்பாடும் காதல் காட்சி படமாக்கப்படுவதையும் தனது கேமராவில் கிளிக்கித் தந்துள்ளார் அந்த நண்பர்.

இன்னும் அதிக படங்களைப் பார்க்க விரும்புவோர், www.paddu.in என்ற இணைய தளத்துக்குப் போகவும்.

ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் கோவாவுக்கே போய், ஷூட்டிங்கிலிருந்த ரஜினியைப் பார்த்ததுடன், படப்பிடிப்பில் ரஜினியைச் சுற்றி நிகழ்ந்தவைகளை படம் எடுத்து, அவற்றில் 78 ஸ்டில்களை தனது இந்த வலைப்பூவிலும் பதிந்துள்ளார். கூடவே ரஜினியிடம் ஆட்டோகிராப்பும் வாங்கியுள்ளார்.

படப்பிடிப்பு இடைவேளையில் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அடம் பிடித்தவர்களைச் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பிய ரஜினி, அவர்களின் மனம் சங்கடப்படக் கூடாதே என மீண்டும் அழைத்து ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்ததும் நடந்துள்ளது.

கோவாவுக்கு வரும் பல வெளிநாட்டுப் பயணிகளும் ரஜினியைப் பற்றிக் கேள்விப்பட்டு, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்துவிடுகிறார்களாம்.

படப்பிடிப்புக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வேடிக்கைப் பார்க்கும் இந்த வெள்ளைக்கார ரசிகர்கள் ரஜினியைப் பார்த்த பிறகுதான் அந்த இடத்தை விட்டே நகர்கிறார்களாம்.

கோவாவின் பனாஜி பகுதிக்கே ரஜினியால் ஒரு தனி களை வந்திருக்கிறது என அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் ககெண்ட் அடிப்பதாகத் தெரிவிக்கிறார் பிரபல ஆங்கில நாளிதழின் கோவா நிருபர் ஒருவர்.

பின்னே... அவர் சும்மா ஸ்டாரா... சூப்பர் ஸ்டாராச்சே!
http://www.envazhi.com