ரஜினியின் தயவில் இந்த ஆண்டும் சன் டிவிக்கு அமர்க்கள தீபாவளியாக விடிகிறது.
சூப்பர் ஸ்டாரின் சாதனைப் படம் சந்திரமுகியை தீபாவளி சிறப்புத் திரைப்படமாக அக்டோபர் 27-ம் தேதி ஒளிபரப்புகிறது சன் டிவி.
சந்திரமுகியின் சாதனை உலகமறிந்தது. ரஜினியின் படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம், அதிக திரையரங்குகளில் 100 நாட்கள் கொண்டாடிய படம், விநியோகஸ்தர்கள் ஷேர் என்ற வகையில அதிக லாபம் சந்பாதித்துக் கொடுத்து, அந்த சாதனையை இதுவரை எந்தப் படமும் தொட முடியாத உயரத்தில் உள்ள படம்.
சந்திரமுகியை மிகப்பெரிய விலைக்கு சன் டிவி வாங்கியிருந்தது. இப்போது அதைவிட பல மடங்கு அதிக விளம்பரதாரர் வருவாயுடன் ஒளிபரப்பப் போகிறது.
ரஜினியின் பாட்ஷா என்ற ஒரு படத்தின் மூலம் சன் சம்பாதித்த தொகை அந்தப் படத்தை வாங்கிய விலையை விட 20 மடங்கு அதிகம் என்கிறார்கள் சன்னில் பணியாற்றும் நமது நண்பர்கள்!
அதிக விலைக் கொடுத்து வாங்கினார்கள், இப்பேது அந்த ரிஸ்க் எடுத்த்தற்கு பலனாக நல்ல லாபம் சம்பாதிக்கப் போகிறார்கள். இதில் உங்களுக்கென்ன வந்தது என சிலர் கேட்கக் கூடும். வியாபாரத்தில் சென்டிமெண்ட் பார்க்கக் கூடாதுதான்.
ஆனால் சிவாஜி, குசேலனை தங்களுக்குத் தராத கோபத்தில் சன் நிகழ்த்திய கோயபல்ஸ் பிரச்சாரம் இருக்கிறதே... சகிக்க முடியாத, மனிதத்தன்மையற்ற செயல் அது. அது என்ன வகை வியாபார தர்மம்?
தனக்கு வேண்டியவர் என்பதற்காக ஒரேயடியாகத் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், அவரே வேண்டாதவராகிவிட்டால், ஒரேயடியாக குழிதோண்டிப் புதைக்க முயல்வதும் சன் குழும நியாயங்கள்.
ரஜினி படங்களை ஒளிபரப்புவதற்கான வர்த்தக உரிமை வேண்டுமானால் சன்னுக்கு இருக்கலாம். ஆனால் தார்மீக உரிமை கிடையவே கிடையாது!
http://www.envazhi.com/
2 comments:
dear sun never said against sivaji movie, infact they promoted a a lot. kuselan movie everyone critized the movie, even iam a diehard thalaivar fan still i didnt like kuselan, even baba was 1000 times better than kuselan.
சிவாஜிக்கெதிராக சன் பிரச்சாரம் செய்ததாக நானும் சொல்லவில்லை. ஆனால் குசேலனுக்கு எதிராக திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்தது சன் என்பதை மறைக்க முடியாது.
குசேலனுக்கு ஆரம்பத்தில் வந்த விமர்சனங்களுக்கும், விஷமம் பிரச்சாரத்துக்குப் பின் எழுதப்பட்ட விமர்சனங்களுக்கும் நிறைய வித்தியாசமிருந்தது. மற்றபடி பாபா, குசேலன் இரண்டுமே வெவ்வேறு தளத்தில் அமைந்தவை. அவற்றை ரசி்ப்பது ரசிக்காதது உங்கள் தனிப்பட்ட ரசனையின் அளவைப் பொறுத்தது.
மற்றபடி பணம் கொடுத்து வாங்கிய படத்தை அவர்கள் இஷ்டப்படி ஒளிபரப்பும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதைத்தான் நான் சொல்லிவிட்டேனே..
Post a Comment