நான் தீவிர ரஜினி ரசிகனாக்கும் என்று சொல்லிக் கொண்டே, ரஜினியைச் சிறுமைப்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள்.
அவர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன்.
இன்று நேற்றல்ல... ஆரம்பத்திலிருந்தே இந்த இருவரும் இது போன்ற உள்ளடி வேலைகளில் தீவிரமாக இருந்திருப்பது சற்றே பின்னோக்கிப் பார்த்தால் புரியும்.
இன்றைய தேதிக்கு தன் சொந்த முகத்துக்கு பெரிய ஈர்ப்பு கிடைக்காது என்று தெரிந்து கொண்டு, ரஜினி ரசிகன் எனும் இரவல் முகத்தை மாட்டிக் கொண்டவர்தான் விஜய். அவர் இதுவரை நடித்துள்ள 48 படங்களில் 47-ல் ஏதாவது ஒரு காட்சியிலாவது ரஜினியின் முகம், அவர் நடித்த படத்தின் காட்சி அல்லது அவர் பெயராவது வருமாறு பார்த்துக் கொள்வார் விஜய்.
ரஜினி ரசிகர்களை ஈர்க்க இதைவிட்டால் வேறு வழி கிடையாது அவருக்கு.
ஆனால் இன்று ஏதோ ஒரு இடம் கிடைத்ததும், தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல ரஜினியை மட்டம் தட்டும் காட்சிகளை விஜய்யின் தந்தை சந்திரசேகரன் தன் சமீபத்திய மூன்றாம் தரப் படமான பந்தயத்தில் வைத்திருந்தார்.
அந்தக் காட்சிகளைப் பார்த்தும் ரஜினி ரசிகர்கள் அமைதியாக இருக்கக் காரணம் இதைப் பெரிதுபடுத்தப் போய், தேவையில்லாமல் அந்த கேவலமான படத்துக்கு விளம்பரம் கொடுத்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில்தான்.
ஆனால் இப்போதோ...
லயோலா கல்லூரி தயாரித்து வெளியிட்ட ஒரு சர்வேயைக் காட்டி, தந்தையும் மகனும் வானுக்கும் பூமிக்குமாய் குதிப்பதை தமிழ் மக்கள் கிண்டல் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் முன்பே சொன்னது போல லயோலா சர்வே என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தீர்ப்பல்ல... அப்படி ஒரு சர்வே வெளியானதன் பின்னணி, அதில் குறிப்பாக விஜய்க்கு மட்டும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், ரஜினியைச் சிறுமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
ரஜினியை விட விஜய் 0.2 சதவிகிதம் அதிக ஆதரவைப் பெற்றுவிட்டதாக அந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இதெல்லாம் ஒரு கணிப்பா... ரஜினி என்ற மனிதரின் நிஜ செல்வாக்கினை அரசியல், சினிமா எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் பொது மக்களே நன்கறிவார்கள்.
ஆனால் இதைப் புரியாத போலி ரசிகர் விஜய், ரஜினியை மிஞ்சும் ஆதரவு மக்களிடம் தனக்கு இருப்பதாகவும், தானே அடுத்த முதல்வர் என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, தன்னைத் தானே புகழ்ந்து சந்தோஷம் கொள்கிறார். இந்த சர்வே முடிவை பெரிய பெரிய கட் அவுட்களில் எழுதி வைத்து பெருமையடித்து வருகிறார்.
சில பத்திரிகைகளில், தானே அடுத்த சூப்பர் ஸ்டார் என சிறப்புக் கட்டுரை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்றும் அறிகிறோம்.
இவர்களுக்கு ரஜினி பாணியிலேயே நாம் சொல்ல விரும்புவது ஒன்றை மட்டும்தான்: கண்ணா வேணாம்... இது நல்லதுக்கில்ல, ரொம்ப நாள் தாங்காது!
http://
www.envazhi.com
2 comments:
நாலு பேருக்கு நல்லது செய்யணுமா விஜய்? அத ஏன் இப்படி செய்றீங்க? புரியலையா....
ஒரு வாதத்துக்காக லயோலா சர்வே சரின்னு வச்சுக்குவோம். 2000 பேர்ல 0.2 சதவீதம் என்பது எவ்வளவு சார்? குத்து மதிப்பா வெறும் நாலு பேர்..... நாலே பேர்...
நாலு பேர் (?) உன்ன அதிகமா சொல்லிட்டாங்கன்றதுக்காக ரெண்டு பக்க விளம்பரம் கொடுக்கறியே? இந்த கொடுமைய எங்க போய் சொல்றது?
சரி விடுவோம் கழுகு கண்ணுக்கு குருவி கொசுவா கூட தெரியாது...
வடிவேலு பண்ண காமெடிக்கு போட்டி வேணாமா?
ஈ. ராம்ஸ்
நாலு பேருக்கு நல்லது செய்யணுமா விஜய்? அத ஏன் இப்படி செய்றீங்க? புரியலையா….
ஒரு வாதத்துக்காக லயோலா சர்வே சரின்னு வச்சுக்குவோம். 2000 பேர்ல 0.2 சதவீதம் என்பது எவ்வளவு சார்? குத்து மதிப்பா வெறும் நாலு பேர்….. நாலே பேர்…
நாலு பேர் (?) உன்ன அதிகமா சொல்லிட்டாங்கன்றதுக்காக ரெண்டு பக்க விளம்பரம் கொடுக்கறியே? இந்த கொடுமைய எங்க போய் சொல்றது?
சரி விடுவோம் கழுகு கண்ணுக்கு குருவி கொசுவா கூட தெரியாது…
வடிவேலு பண்ண காமெடிக்கு போட்டி வேணாமா?
ஈ. ராம்ஸ்
Post a Comment