சக நடிகர்கள் தொடங்கி சாதாரண ரசிகன் வரை அனைவரையும் கட்டிப் போடும் அற்புத சக்தி மிக்கவை ரஜினியின் கண்கள்.
மிகச் சிறந்த தவசீலர்களுக்கும் யோகிகளுக்கும் மட்டுமே அமையப்பெற்ற வசீகரமும் இறைத் தோற்றமும் நமது ரஜினியின் கண்களுக்கு மட்டுமே உண்டு.
முதன் முதலில் அவரது கண்களின் தீட்சண்யம் கண்டு நான் மிரண்டு போனது ஜானி படத்தில், துரோகியாய் மாறும் காதலி தீபாவாவைக் கொன்றுவிட்டு ஒரு வெறித் தோற்றம் காட்டுவாரே அந்த காட்சியில்.
சந்திரமுகி வேட்டைய ராஜாவின் கண்களைப் பார்த்தபோது மீண்டும் அதே உணர்வை அடைந்தேன். அந்த பார்வையின் சக்திக்கு நிகரான வசனங்களை எவ்வளவு பெரிய இயக்குநராலும் எழுத முடியாது, அதற்கு நிகரான உணர்வுகளை எவ்வளவு சிறந்த நடிகராலும் காட்ட முடியாது. காரணம் அந்தக் கண்களில் தெரிவது வெறும் நடிப்பல்ல... ஒரு நல்ல மனிதரின் மனம். நல்லவரின் பார்வையை எதிர்த்து எவராலும் சில விநாடிகள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது.
பாபாவில் ரஜினி இப்படிச் சொல்வார்: “ஐயா... யாராவது பேசும்போது நான் அவங்க முகத்தைப் பார்க்க மாட்டேன். கண்களைத்தான் பார்ப்பேன். பொய் சொல்றவங்களை அவங்க பார்வையிலேயே கண்டுபிடிச்சிடுவேன்!”
-இந்த மாதிரி ஒரு மனிதரின் பார்வைக்கு எதிரே எவர் நிற்க முடியும்! அதனால்தான் அவர் முதுகுக்குப் பின் தூற்றுவோரும்கூட முகத்துக்கு நேரே வந்தவுடன் வாழ்த்திப் பாட ஆரம்பித்து விடுகிறார்கள்!
இங்கே எந்திரன் – தி ரோபோ படப்பிடிப்புக்காக கோவாவில் முகாமிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, படப்பிடிப்பு இடைவேளையில் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்க்கிறீர்கள். காணக்கிடைக்காத இந்த அரிய காட்சியை, சூப்பர் ஸ்டாரின் அதி தீவிர ரசிகர் ஒருவர் கோவாவில் காத்திருந்து படம் பிடித்து அனுப்பியிருக்கிறார்.
நண்பர்களே... உலகில் நீங்கள் எத்தனையோ சிறந்த நடிகர்களைத் திரையில் பார்த்திருப்பீர்கள், ரசித்திருப்பீர்கள்.
இந்தப் படங்களை ஒரு முறை பாருங்கள். இந்த சூரியப் பார்வைக்கு நிகராகுமா மற்ற நட்சத்திரங்களின் மினுக்கல்கள்!
http://www.envazhi.com
4 comments:
Excellent Picture. Excellent Article.
thanks... Please come to envazhi!
Hi sir, i cant view the image... please forward it to my mail id... Karthikeyan.Nagendran@cognizant.com
Please visit www.envazhi.com
Post a Comment