Tuesday, October 7, 2008

உலக சூப்பர் ஸ்டார் ரஜினி!


சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமான கோவாவில் இப்போது பயணிகளுக்கு சுவாரஸ்யமான பகுதி எது தெரியுமா? பனாஜி!

ஆம்... இங்குதான் ரஜினியின் எந்திரன் – தி ரோபோ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் பார்த்த காட்சிகள் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா இப்படி வர்ணித்துள்ளது, ஒரு மன்னரின் வருகைக்குக் கட்டியம் கூறுவது போல:

ரஜினி வருகிறார்... பராக்!

சுற்றிலும் பரபரப்பு, திரண்டு வரும் ரசிகர் வெள்ளம், அனைத்துக்கும் மத்தியில் அமைதியாய் அமர்ந்திருக்கிறார் உலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், என்று தனது கட்டுரையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் அந்த நிருபர்.

சந்தேகமில்லை... ரஜினி ஒரு உலக சூப்பர்ஸ்டார்தான். ஒருசிலர் இதை மிகை என்றுகூடக் கூறலாம்... ஆனால் முத்து படத்திலேயே சர்வதேச நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டவர் ரஜினி.

அதன் தொடர்சியாக இரு பெரும் வல்லரசு நாடுகளின் பிரதமர்களால் உச்சரிக்கப்பட்ட ஒரே நடிகரின் பெயர் ரஜினியுடையதாகத்தான் இருக்கும்.

இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டுப் பிரதமர்களால் இந்திய கலாச்சாரத்தின் பிரதிநிதியாக முன்மொழியப்பட்ட பெயர் ‘ரஜினி’!

சிவாஜி – தி பாஸ் படம் மூலம் உலகின் முன்னணி நட்சத்திரமாகிவிட்ட ரஜினி, எந்திரன் படமாகிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் உலக சூப்பர் ஸ்டாராக அங்கீகாரம் பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியனையும் நெஞ்சு நிமிர வைக்கும்.
for more pictures please visit: http://www.envazhi.com

4 comments:

M Arunachalam said...

Dear Vino,

Happy to see so many postings from you on a single day. Please keep it up & give us more & more interesting news. Please don't make us to starve for Rajini news from you for days together.

Arun

Vaanathin Keezhe... said...

Thank you Arun... Please come to http://www.envazhi.com.

Anonymous said...

வணக்கம் உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது.எனது பதிவிலும் லிங்க் கொடுத்துள்ளேன்.

Prad said...

Dear Vino ji

One of my frnd posted this pics in his blog...this were taken at goa..there are 78 photos....plz post in this blog as our frnds can have a look of our superstar....please Vinoji

http://www.paddu.in/

Cheers
Pradeep S