Thursday, October 23, 2008

ரஜினி ரசிகனாக இருப்பதில் என்ன பெருமை?

ம்மவர்கள் சிலர் ரஜினி படத்துக்கு வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி முதல் ஷோ பார்ப்பார்கள்... ஆனால் வெளிப்படையாக தங்களை ரஜினி ரசிகன் என சொல்லிக் கொள்ள யோசிப்பார்கள். அப்படிச் சொன்னால் அறிவாளிகள் கூட்டம் தம்மை ஒப்புக் கொள்ளுமோ என்ற எண்ணம் போலிருக்கிறது!

இந்த மாதிரி நபர்கள் சிலரை நீங்களும் கூட பார்த்திருப்பீர்கள். ரஜினியின் சிறப்புகளைப் பற்றி நாம் சொன்னால் அல்லது எழுதினால், ‘அட, ஆமால்ல... ரஜினி மாதிரி ஒருத்தரைப் பார்க்க முடியாது,’ என்பார்கள்.

அந்தப் பக்கம் போய், வேறு யாராவது ஒருவர் ரஜினி பற்றி தாறுமாறாகப் பேசினால், அல்லது எழுதினால் அதைக் கேட்டு, படித்துவிட்டு அதற்கும் ‘அட, இதுகூட கரெக்டா இருக்கே!’ என்று அங்கும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு வைப்பார்கள்.

இந்த நண்பர்களுக்காகவே இந்த பதிவு...

உலகின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர் ரஜினி என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு முறை அல்ல, இருமுறை பாராட்டியிருக்கிறார் ரஜினியை. அது சம்பிரதாயமான பாரட்டல்ல...

ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, இருநாட்டு கலாச்சாரத்துக்கு ஒரு பாலம் என்ற பொருளில் மன்மோகன் சிங் பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது.

‘உலகில் எந்த நடிகரிடமும் இல்லாத சிறப்பான நடிப்புத் திறமை, ஸ்டைல் கொண்ட ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான். மசாலா படமா இருந்தாலும், கலைப் படமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்துக்கு தனிச் சிறப்பைத் தரவேண்டும். அந்தத் திறமை ரஜினிக்கு மட்டுமே உண்டு.

நான் அமெரிக்காவில் இருந்தபோது பார்த்த எத்தனையோ நடிகர்களை ரஜினியோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன். நம்ம ரஜினிதான் எப்போதும் எனக்கு மேம்பட்டவராகத் தெரிவார். அது ரஜினி நம்மவர் என்பதால் அல்ல... ரஜினியிடம் உள்ள வசீகரத்தின் மகிமை அது. எம்ஜிஆருக்குப் பின் அப்படியொரு சக்தி உள்ள ஒரே நடிகர் ரஜினிதான்...’ – இதைச் சொன்னவர் சாதாரண நபரல்ல... கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா. (இத்தனைக்கும் இவரைத்தான் ஒகேனக்கல் உண்ணாவிரதத்தில் ரஜினி நேரடியாக விமர்சித்துப் பேசினார்.)
ரஜினி ரசிகர்கள் என்றால் ஏதோ அடிமட்டத்தில் இருப்பவர்கள் என்று சில அறிவுஜீவிகளுக்கு நினைப்பு.

ஆனால் மெத்தப் படித்தவர்களும் சரி... படிக்காத பாமரர்களும் சரி பெரிதும் விரும்பும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே!

அதற்கு சிகரம் வைத்தது போல் உள்ளது சமீபத்தில் புக்கர் விருது (சர்வதேச அளவில் மிகவும் பெருமை வாய்ந்த இலக்கிய விருது) பெற்ற எழுத்தாளர் அரவிந்த் அடிகா அளித்துள்ள பேட்டி.

அரவிந்த் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். தனது 33 வது வயதில் எழுதிய முதல் நாவலான தி வொயிட் டைகருக்கு அவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்.

இந்த நாவலின் கதாநாயகன் பல்ராம் ஹல்வாய் கிட்டத்தட்ட ரஜினியின் திரை பிம்பத்துக்கு சரியாகப் பொருந்தக் கூடியவன். லஞ்ச ஊழலில் திளைக்கும் சமூகத்தின் அவலம் கண்டு பொங்குகிறான். வறுமையும் சமூக அநீதியும் அவனை சட்டத்தைக் கையிலெடுக்க வைக்கின்றன... (அட, தலைவர் படம் மாதிரியே இருக்கே... என்கிறீர்களா! நாவலில் அந்தப் பாத்திரத்தைச் சொன்ன விதம்தான் அதைப் பரிசுக்கு உரியதாக்கியிருக்கிறது)

ஒருவேளை இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரித்தால், யாரை ஹீரோவாகப் போடுவதாக உத்தேசம் என டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் கேட்ட போது, சற்றும் தயங்காமல் அவர் சொன்னது:

‘இந்த வேடத்துக்கு ரஜினி மட்டும்தான் சரியாகப் பொருந்துவார்!’

மற்றொரு பேட்டியில் (சிஎன்என்) இதே கேள்வி கேட்கப்பட்ட போது, அவர் சற்றும் தயங்காமல் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

என்னுடைய பல்ராம் ஹல்வாய், இந்திய சூப்பர்ஸ்டார் ரஜினிதான். அவருக்கு மட்டுமே அந்த வேடத்தைத் தாங்கும் Charisma உண்டு. இன்னொன்று நான் சென்னைப் பையன், ரஜினி போன்ற ஒரு பாத்திரத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த நாவலை எழுத உட்கார்ந்தேன், என்று கூறியிருக்கிறார்.
அதான் ரஜினி... அவர் அரசியலுக்கு வருகிறார்... வரவில்லை... அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். எப்பேர்ப்பட்ட அரிய கலைஞர் நம்முடன் இருக்கிறார்... அந்தப் பெருமையை எண்ணிப் பாருங்கள்!

இப்போது சொல்லுங்கள்... தலைப்பாக வைக்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை!
http://www.envazhi.com

2 comments:

கிரி said...

//அந்தப் பக்கம் போய், வேறு யாராவது ஒருவர் ரஜினி பற்றி தாறுமாறாகப் பேசினால், அல்லது எழுதினால் அதைக் கேட்டு, படித்துவிட்டு அதற்கும் ‘அட, இதுகூட கரெக்டா இருக்கே!’ என்று அங்கும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு வைப்பார்கள்//

:-))))))))))

//ரஜினி ரசிகர்கள் என்றால் ஏதோ அடிமட்டத்தில் இருப்பவர்கள் என்று சில அறிவுஜீவிகளுக்கு நினைப்பு//

இந்த அறிவு ஜீவிக தொல்லை தாங்க முடியலைங்க :-)

//தனது 33 வது வயதில் எழுதிய முதல் நாவலான தி வொயிட் டைகருக்கு அவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்.//

முதல் புத்தகத்திலேவா !!!!!!!

//இப்போது சொல்லுங்கள்... தலைப்பாக வைக்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை!//

சும்மா அதிருதுல்ல

வெங்கட்ராமன் said...

டக்கர் பதிவு.

அட, இதுகூட கரெக்டா இருக்கே!
அப்டீன்னு நான் எங்கயும் போட மாட்டேன்