ஒரு சுறு சுறு, சூடான எச்சரிக்கைப் பதிவுக்கு முன்... இதோ சூப்பர் ஸ்டாரின் எந்திரன் - தி ரோபோ பற்றிய ஒரு ஜில் செய்தி.
எத்தனை முறை படித்தாலும், என்னதான் கதையாகவே இருந்தாலும் ரஜினி பற்றிய செய்திகளுக்கு இருக்கும் மவுசு தனி. இதை ரஜினி ரசிகர்களை விட நன்கு உணர்ந்திருப்பவர்கள் பத்திரிகைகளும், இதர செய்தி ஊடகங்களும்தான்...
நன்றி- தட்ஸ்தமிழ்மாச்சு பிக்குவில் ரஜினி – ஐஸ் டூயட்!பெரு நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான மாச்சு பிக்குவில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் ஆடிப்பாடும் டூயட் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள மிகப் புகழ்பெற்ற இடம் மாச்சு பிக்கு (Machu Picchu). ஐநாவின் யுனெஸ்கோவால் எட்டாவது உலக அதிசயமாக சிறப்பு அங்கீகாரம் தரப்பட்டுள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தலம் இது. இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள முதல் படமும் எந்திரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்தபோது செல்போன் காமிராக்களில் படமெடுத்து சிவாஜி பட ரகசியங்களை சிலர் வெளியிட்டதால், மீண்டும் அப்படியொரு தவறு நடக்கக் கூடாது என்பதில் ஷங்கர் கவனமாக உள்ளார். அதனால்தான் பத்திரிகை செய்திக் குறிப்பில் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்துவதாகக் கூறிவிட்டு, இப்போது பிரேசில், பெரு மற்றும் சிலி நாடுகளில் நடத்தி வருகிறார்.
முதல் பாடல் முழுமையாக முடிவடைந்துவிட்டதாம். இரண்டாவது பாடலை ஹாலிவுட் ஸ்டுடியோவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
இது எந்திரன் (ரோபோ) ரஜினி பிரமாண்ட அரங்கங்களின் பின்னணியில் பாடும் அறிமுகப் பாடல் என்பதால் மிகுந்த கவனத்துடன் வடிவைத்துள்ளாராம் ஷங்கர். ராகவா லாரன்ஸ்தான் இதற்கு நடனம் அமைப்பதாகக் கூறப்படுகிறது.சிவாஜியில் பட்டையைக் கிளப்பிய அதிரடி... பாடலுக்கு இவர்தான் நடனம் அமைத்திருந்தார்.
அமேசான் நதி மற்றும் மழைக் காடுகளிலிருந்து 100 மைல் தூரத்தில் உள்ள இந்த சரித்திரப் புகழ் பெற்ற இடத்தில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் பாடும் டூயட் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுப் பாடலையும் இங்கு படமாக்கவில்லை ஷங்கர். இதன் இன்னொரு பகுதியை அமேசான் நதிப் படுகையிலும், பிரேஸில் நாட்டில் உள்ள அமேசான் காட்டின் இன்னொரு பகுதியிலும் எடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் படத்தில் ரஜினிக்கு இரண்டு ஓப்பனிங் பாடல்கள். அதே போல ரஜினிதான் படத்தின் வில்லன் கம் ஹீரோ.
முழுக் கதையும் படித்துவிடத் துடிப்பவர்கள் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ படிங்க!!
1 comment:
என்ன இது? ரஜினி லிப்ஸ்டிக் போட்ட மாதிரி இருக்குது?
Post a Comment