Sunday, September 21, 2008

கதை-வசனம் கரெக்டாதான் இருக்கு... ஆனா நம்பத்தான் முடியல!


குமுதம் ரிப்போர்ட்டர் இந்த இதழைப் படித்துவிட்டு நமது நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான ஒருவர் அடித்த காமெண்ட் இது. காரணம் கடந்த காலம் உணர்த்தும் உண்மைகள் அப்படி...

இந்த பிளாக்கில் நாம் பதிவு செய்துள்ள சில விஷயங்களைப் படித்துவிட்டு, ரஜினி ரசிகர்களும், நடுநிலையாளர்களும், சக ப்ளாக்கர்களும் கூட நம்ப முடியாமல், ‘இதெல்லாம் உண்மைதானா...?’ என என்னிடமே கேட்டிருக்கிறார்கள்.

ரஜினி ஒரு சமூக நல அமைப்பைத் தொடங்கி அதை ரசிகர்களிடம் ஒப்படைக்கப் போகிறார்... அல்லது அந்த அமைப்பின் செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு பின்னர் அதையே அரசியல் இயக்கமாக மாற்றப் போகிறார் என்ற பேச்சுக்களை நாமும் கூட முழுமையாக நம்பவில்லைதான். ஆனால் வழக்கத்துக்கு மாறான சில வேலைகளில் ரஜினியின் நெருங்கிய வட்டத்தினர் ஈடுபட்டு வருவதைப் பார்க்கும்போதுதான் இந்தப் பேச்சுக்களை நம்ப வேண்டி வருகிறது.

இந்த இதழ் ரிப்போர்ட்டரில் எழுதப்பட்டுள்ள ரஜினி டிவி விஷயம் ஏதோ இன்று நேற்று உருவானதல்ல... பல மாதங்களாகவே பேசப்பட்டு வருவதுதான். ஆனால் இதனை ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினியின் பொது வாழ்க்கையை மனதில் கொண்டு ஆரம்பிப்பதுபோல் தெரியவில்லை.

ஒரு திரைப்படம் அல்லது இதர கமர்ஷியல் ப்ராஜக்ட் போலத்தான் இதுவும். இந்த யோசனை தனக்கு இருப்பது பற்றியும், ரஜினியின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் ஏற்கெனவே சவுந்தர்யா சில பத்திரிகையாளர்களிடமும் பேசியிருக்கிறார். இப்போது ரஜினியின் அக்டோபர் சந்திப்பு, அரசியல் முயற்சி ஆகியவற்றோடு இதை வசதியாக முடிச்சுப் போட்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் நண்பர் சொன்னதுபோல், கதை வசனத்தை நன்றாகத்தான் எழுதியிருக்கிறது குமுதம் குழு.

பத்திரிக்கை விற்க வேறு வழியே தெரியவில்லை... !

இன்றைய சூழலில் யாரைப் பற்றி எழுதினாலும் மக்கள் படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த், சரத்குமார் அல்லது கமல்ஹாசன் என யாரைப் பற்றி எழுதினாலும் அவை வெறும் செய்திகள் அல்லது கிசுகிசுக்கள்தான். பத்திரிக்கை விற்பனையைத் தூண்டும் சக்தி அந்த எழுத்துக்களுக்குக் கிடையாது.
ஆனால் ரஜினி பற்றிய எழுத்துக்களுக்கு மட்டும் – என்னதான் மோசமாகவே எழுதினாலும் - தனி ஜீவன் வந்துவிடுகிறது.

இந்த ரிப்போர்ட்டர் இதழே கூட அதற்கு ஒரு சாட்சிதான்.

வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் முன்னதாகவே இந்த இதழ் கடைகளுக்கு வந்துவிட்டது. ஆலந்தூர் சுரங்கப்பாதை அருகே ஒரு கடையில் போஸ்டர் தொங்கவிடும்போதே அதை வேடிக்கைப் பார்க்க ஐந்தாறுபேர் நின்றுவிட்டனர்.

‘திரும்ப ஆரம்பிச்சிட்டாங்கடா...’ என்று முணுமுணுத்தபடி அந்த இதழை வாங்கத் தொடங்கினர். நான் திரும்ப அந்தக் கடைக்கு வந்த போது ஒரு மணி நேரத்துக்குள் 25 இதழ்கள் விற்றுவிட்டாக சந்தோஷத்துடன் சொன்னார் கடைக்காரர்.

‘இந்த சூட்சுமம் தெரிஞ்சதாலதான் தொடர்ந்து ரஜினி மேட்டரா எழுதித் தள்றாங்க... எப்படியும் ரோபோ படம் வரும் வரை இப்படியே காலத்தை ஓட்டிட முடியும். வேற எந்த நடிகர் பத்தி நியூஸ் போட்டாலும் வாங்க மாட்டேங்கறாங்க... ரஜினி அட்டைப்படம்னா அன்னிக்கே வித்துத் தீந்துடும்... ஜனங்க அவர்மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்க...’ என்றார் கடைக்காரர்.

இதோ... அடுத்த இதழ் விகடனுக்கும் ரஜினிதான் அட்டைப்பட நாயகனாக அருள்பாலிக்கப் போகிறார்!

எல்லாம் சரிதான்... இப்படியெல்லாம் சம்பாதித்துவிட்டு படம் ரிலீசாகும்போது வேண்டுமென்றே பொய்யையும் புழுதியையும் வாரித் தூற்றுகிறார்கள்...
கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக எழுதினார்கள்... நல்ல படத்தை ஓடவிடாமல் செய்தார்கள். நல்லதே செய்தாலும் தமிழர்களுக்கு எதிரானவராக ரஜினியைத் திட்டமிட்டுச் சித்தரிக்கிறார்கள்.
நியாயம்தானா?

7 comments:

Anonymous said...

Vino, sorry about the un related comment for this article:

அந்த (எதோ ஒரு ஈன பத்திரிகையில் வாந்தியெடுத்துகொண்டிருக்கும்) மதன் என்கிறவன் ரஜினியைபற்றி சொன்னது புகழ்ச்சி இல்லை அவன் கூறியது இகழ்ச்சி...அதாவது அவன் சொன்னது "சூப்பர் ஸ்டார் என்பது ரஜினி மட்டும்தான்" என்பது அவனைப்பொறுத்தவரை அந்த பட்டம் ரஜினி ஒரு KING OF BOX OFFICE என்பதால் இல்லை என்கிற தொனியில் கூறியிருக்கிறான் என்பதே உண்மை..இதை புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! அவன் ஒரு "மைக்‍‍‍‍ ‍‍மோகன் போட்டியாளனின்(கமலா ஆசன்)" அடிவருடி... அந்த கமலா ஆசன் கூட ஒரு பேட்டியில எனக்கும் ரஜினிக்கும் போட்டியில்லை பொறாமையில்லை ஏன்னா நான் வாலி பால் விளையாடறேன் அவர் புட் பால் விளையாடுகிறார் பிறகு எப்படி எங்களுக்குள் போட்டி என்றான். இதிலுள்ள உள்குத்து எங்களுக்கும் தெரியும் கவட்டகாலனே கமலா ஆசனெ உன்னால 25 வருட தோல்வி/வயித்தெரிச்சல அடக்க முடியவில்லை என்பது எங்களுக்கும் தெரியும்... உன்னால மைக் மோகனிடம் சுமார் பதினைந்து ஆண்டுகள் முக்கி முக்கி போட்டிபோடத்தான் முடிந்தது!!! ரஜினியின் சக்தி! ரஜினியின் Mass Reach! Screen presence!!, Humanity, Integrity, Humbleness, Power, etc பக்கத்தில கூட வரமுடியவில்லை.... அடேய் ராமராஜன் படம் நல்லா ஒடிய காலத்தில கூட உன் ஒலகத்தரம் ஒடவில்லையடா ! ஹா ஹா... பொடா பொயி பொழப்ப பாரு..

Vaanathin Keezhe... said...

ஹாஹஹ்ஹா...

நல்லா எழுதியிருக்கீங்க!
நன்றி நண்பா...

Anonymous said...

//Mass Reach! Screen presence!!, Humanity, Integrity, Humbleness, Power//

Divinity missing?

Anonymous said...

Anony,
aaha! enna unga olga gnaam, Rajini's is divine in reality. Not like that 10faces,in fake. Eyya, konjam nalla home work pannakoodatha comment negative-a poda, ulagathukke theriyum, Rajini and is spritiual side and K's karumandhra pagutharivuvathaam.

Vaanathin Keezhe... said...

என் வேலையை சுலபமாக்கியதற்கு நன்றி நண்பா...
நல்ல பதில்!

Anonymous said...

அட விடுங்க சார், சுமார் 10 வருடம் 'மைக்‍ மோகன்' சுமார் 10 வருடம் 'ராமராஜன்' இவங்க கூட ரொம்ப ஒலகத்தரமா போட்டிபோட்டிருக்காக்காங்க... tell me the last commercially successful or a film which was not filthy or which was accepted by all sort of audiances film of kamala hassan hahaha சுமார் 20 வருடமா 'மைக்‍ மோகன்' 'ராமராஜன்' இவங்ககூட போட்டியிட்டு கடைசில ஒரு பிரெக்‍ ஈவன் படத்த கொடுத்திருக்கார்னா பாருங்கோ! கோழி பிரியாணி ஹாஹா....ஹாஹா.....ஹாஹா... இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புதான் சார்.... ஹாஹா...ஹாஹா

Anonymous said...

'வெணாம்! அழுதுடுவேன்... இத்தோட நிறுத்திக்குவோம்... ‍ ‍ இப்படிக்கு "முன்னாள் ஆசுகாரு ரவி இன்னாள் ஆர்டினரி நரி"