Showing posts with label Eanthiran. Show all posts
Showing posts with label Eanthiran. Show all posts

Tuesday, October 7, 2008

Exclusive: இதற்குப் பெயர்தான் ‘ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி’!

சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அளித்த பேட்டியைப் படித்துவிட்டிருப்பீர்கள்.

அதனால் ஒரு மாறுதலுக்காக, இதோ ஐஸ்வர்யாவின் புத்தம் புது படம், அதுவும் நம்ம ஸ்டைலிஷ் எந்திரனுடன் காதல் மொழி பேசும் காட்சி!
மக்களின் நாடித் துடிப்பை நன்கு தெரிந்து வைத்திருப்பவர் ரஜினி. இந்தக் கதைக்கு இப்படித்தான் வரவேற்பிருக்கும் என்பதை தெளிவாக முன்கூட்டியே சொல்லிவிடுவார்.
சந்திரமுகி, குசேலன் ஆடியோ வெளியீட்டு விழாக்களை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தனது படத்தில் ஐஸ்வர்யா ராயை நாயகியாக நடிக்க வைக்க தொடர்ந்து முயற்சிப்பது ஏன் என்பதற்கான விளக்கத்தை ரஜினி ஒரு மேடையில் சொல்லியிருந்தார். அதன் வீடியோ பதிவு கூட நமது தளத்தில் உள்ளது. இதோ அதன் சுருக்கம்:

‘என்னடா இந்தாளு எப்பப் பார்த்தாலும் ஐஸ்வர்யா ராய் நாயகியா வேணும்னு கேக்கிறானேன்னு சிலர் நினைக்கலாம்.

படையப்பாவில் நீலாம்பரியா, சந்திரமுகியில் நாட்டியக்காரி சந்திரமுகியா... ஐஸ்வர்யாவை கற்பனைப் பண்ணிப் பாருங்க. அதுக்காகத்தான் அவங்க வேணும்னு கேட்டேன்...’, என்று பேசியிருந்தார்.

எந்திரனில் இப்போது ஐஸ்வர்யா ராயைத் தவிர இன்னொரு நாயகியை ரஜினிக்கு ஜோடியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை அல்லவா?

இதுக்குப் பெயர்தான் திரை ரசாயணமோ... (அதாங்க ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி!)
http://www.envazhi.com

Saturday, September 27, 2008

இன்று வருகிறார் ரஜினி!


ரஜினியின் அரசியல் குறித்து இதுவரை எத்தனையோ முறை பரபரப்பான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அதனையொட்டி அவர் அரசியலுக்கு வருகிறார், வரமாட்டார் என பந்தயம் கட்டும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது.

ஆனால் இந்த முறை ரஜினியின் அரசியல் குறித்த பரபரப்புகளுக்கு தகுந்த ஆதாரங்கள் பலவற்றைக் காட்டுகிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள்.

அவர் சென்னையில் இருக்கும் வரை கிளம்பவில்லை. ஆனால் எந்திரனுக்காக அவர் அமெரிக்கா கிளம்பிய பின்னர்தான் அத்தனை பரபரப்புகளும் கிளம்பியுள்ளன என்பதையும் நாம் மறந்துவிடவில்லை.

அமெரிக்காவிலிருந்தாலும் தன்னைப் பற்றி வரும் செய்திகள், ரசிகர் மன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார் ரஜினி. அங்கிருந்துதான் தனது மன்றங்களுக்கு பல உத்தரவுகளை ரஜினி பிறப்பித்தார் என்றும், அழைப்புகள் கூட அவரது உத்தரவுக்குப் பிறகுதான் அனுப்பப்பட்டன என்றும் நமக்கு நம்பகமான நபர்கள் மூலம் இன்று காலை தகவல் கிடைத்தது.

எனவே அமைதியான சூழலில் கிளம்பிப் போனவர் இப்போது பரபரப்பான சூழலில் திரும்புகிறார்.

இந்தப் பரபரப்புக்கு ஆதாரமில்லாமல் இல்லை. அனைத்தும் உண்மைதான் என பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள் ரஜினியின் நண்பர்கள். அவற்றில் பெரும்பாலானவற்றைப் பற்றி ஏற்கெனவே இங்கே விவாதித்திருக்கிறோம்.
இன்று ரஜினி வருகிறார். அடுத்து என்ன நடக்கும்... என்ற கேள்விக்கு யூகங்களை பதிலாகத் தருவதை விட, அவர் வாயாலேயே என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்...


இதோ ரஜினி வருகை குறித்த செய்தி (தட்ஸ்தமிழ்):

மீண்டும் ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று இரவு சென்னை வருகிறார் ரஜினி. இது அவரது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் தகவல்.

ஒரு மாத கால எந்திரன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினி சென்னை திரும்புகிறார். அவரை விமான நிலையத்தில் பெரும் திரளாக வரவேற்க முதலில் திட்டமிட்டிருந்தனர் ரசிகர் மன்றத்தினர். 1996 தேர்தலின் போது ரஜினிக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு இணையாக ஏற்பாடு செய்யவும் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், அந்த மாதிரி எதுவும் செய்துவிடாதீர்கள், ரஜினி அதை விரும்பவுமில்லை என தலைமை மன்றத்திடமிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, இப்போதைக்கு அமைதியாக இருக்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இருந்தாலும் இன்று மாலை நெருங்க நெருங்க ஒரு வேகத்தில் அனைவரும் விமான நிலையத்தில் குவிந்தாலும் வியப்பதற்கில்லை, என்கிறார் ரஜினி ரசிகர் மன்ற சென்னை மாவட்டப் பிரமுகர் ஒருவர்.

அரசியல் போஸ்டர்கள்!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை மொத்தமாகச் சந்திக்கிறார் ரஜினி. இதனால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள் சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே பேனர்கள் வைத்துள்ளனர். ஏராளமான போஸ்டர்களை தங்கள் சொந்த செலவில் ஒட்டியுள்ளனர்.

ரஜினி, எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ள இந்த பேனர் மற்றும் போஸ்டர்களில் மகாத்மா காந்தி, காமராஜர், விவேகானந்தர், காயிதே மில்லத், தேவர் போன்ற பெரும் தலைவர்களோடு ரஜினியை ஒப்பிட்டு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்தப் போஸ்டர்கள் மாவட்ட அளவிலும் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர் ரஜினி மன்ற நிர்வாகிகள் சிலர்.

ரசிகர்களுக்கு அழைப்பு!

ரஜினி-ரசிகர்கள் சந்திப்புக்கு அக்டோபர் 3-ம் தேதி முதல் ரஜினி தேதி ஒதுக்கியுள்ளார். மாவட்ட வாரியாக ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்துக்கு வருமாறு ரஜினி ரசிகர் மன்றத் தலைவரான சத்தியநாராயணா அழைப்பு அனுப்பியுள்ளார்.

முதலில் சென்னை மற்றும் புறநகர் பகுதி ரசிகர்ளையும், மன்றப் பொறுப்பாளர்களையும் சந்திக்கும் ரஜினி, மற்ற மாவட்டங்களிலிருந்து தலா 25 மன்றப் பொறுப்பாளர்களைச் சந்திக்கப் போகிறாராம்.

இதற்கான அழைப்புகள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும், மற்ற விபரங்ளை இன்று ரஜினி வந்தபிறகு கூறுவதாகவும் மன்றத் தலைவர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

Sunday, September 7, 2008

எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் - தி ரோபோ படத்தின் முதல் ஸ்டில் சுவரொட்டிகள் வடிவில் வெளியாகயுள்ளது.

இந்த ஸ்டில்தான் நாளை பப்ளிசிட்டி டிசைனாகவும் செய்தித் தாள்களுக்குத் தரப்பட்டுள்ளது.

ஆனாலும் இதுவரை பத்திரிகைகளுக்கு எந்த ஸ்டில்லும் அதிகாரப்பூர்வமாகத் தரப்படவில்லை.

இன்னும் ஒரு மாதத்துக்கல்ல... ஒரு வருடம் வரைகூட மீடியா காலத்தை ஓட்டிவிடும் இந்த ஒரு ஸ்டில் மற்றும் அதற்கான பின்னணிக் கதையை பின்னி எடுப்பதில்.

இதைத் தவிர மேலும் இரண்டு வித்தியாசமான, மிரட்டல் ஸ்டில்களும் உண்டாம். அவை விரைவில் வெளிவரக் கூடும்.

அதேநேரம் படத்துக்கு தேவையற்ற மிகை எதிர்பார்ப்பை தரக்கூடாது என்பதால் படத்தில் வரும் ரஜினியின் உண்மையான தோற்றம் குறித்த ஸ்டில்களை வெளியிடாமல் முழுக்க முழுக்க அனிமேட்டட் டிசைன்களை மட்டுமே தரப்போகிறார்களாம்.

அதே போல ரஜினி பட வரலாற்றிலேயே முதல்முறையாக ரஜினிக்கு இணையாக கதாநாயகியின் பெயரும் அச்சிடப்பட்டுள்து.

இது ஷங்கருக்கு ரஜினி கூறிய ஆலோசனை என்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் காம்பினேஷனில் ஒரு படம் வரவேண்டும் என நீண்ட நாளாகவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். எனவே ஐஸ்வர்யா ராய் பெயரையும் இணைத்தே வெளியிடுங்கள். ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று ரஜினி கூறினாராம்.

அதுதான் ரஜினி!

Saturday, September 6, 2008

ரஜினியும் கர்நாடக சொத்துக்களும்!


கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர் என்று ஒரு சொலவடை சொல்வார்கள் சிவனடியார்கள்.

ரஜினி பற்றிய உண்மைகள் அல்லது வதந்திகள் இரண்டுக்குமே இது சாலப் பொருந்தும்.

ரஜினி தமிழ்நாட்டில் சம்பாதித்து கர்நாடகத்தில் முதலீடு செய்கிறார் என்று நீண்ட காலமாகவே சொல்கிறார்கள்... சொல்கிறார்கள்... சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

அரைகுறை பத்திரிகை நிருபர்கள் முதல் மெத்தப் படித்த அஞ்ஞானிகள் வரை இதே புலம்பல்தான்.

அட உண்மையாகத்தான் இருக்குமோ... என்ற ஒரு மயக்கத்தில் நானும் ஒசூர் எல்லையிலிருந்து மைசூர், ஹம்பி வரை நெடுஞ்சாலை, குறுஞ்சாலை எல்லாம் ஒரு வார பயணம் கூட செய்து பார்த்துவிட்டேன். இதில் நமக்குத் தெரிந்த உண்மை ஒனறுதான், பெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய சொத்து வைத்திருக்கும் விஐபிக்களில் நிறையப் பேர் தமிழர்கள் என்பதே அது!

அவர்களில் சிலரது பெயரை இங்கே வெளியிடுவதில் நமக்கு எந்த பயமும் இல்லை.
கர்நாடகத்தில் சொத்துக் குவித்து வைத்திருக்கும் தமிழர்களில் முதலிடம் பிடிப்பவர்கள்... சந்தேகமே வேண்டாம், தமிழக முதல்வர் மாண்புமிகு கருணாநிதியின் குடும்பத்தினர்தான்.

நாளைய முதல்வர் எனப் புகழப்படும் ஸ்டாலின் தொடங்கி, அங்கேயே செட்டிலாகிவிட்ட செல்வி – செல்வம் தம்பதிகள் வரை கணக்கில்லாமல் நிலங்களாக, எஸ்டேட்டுகளாக, தொழிற்சாலை பங்குகளாக, பங்களாக்களாக, அலுவலகக் கட்டிடங்களாக இவர்களது சொத்துமதிப்பு பல நூறு கோடிகளைத் தாண்டுகிறது.

கோவையைச் சேர்ந்த பெரும் தொழ்லதிபர்கள் இருவருக்கு இந்தப் பகுதிகளில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.2000 கோடியைத் தாண்டுகிறது.

டிவிஎஸ் நிறுவனம், இந்து, அதிமுகவின் தம்பி துரை, ஏசி சண்முகம் இவர்களுக்கெல்லாம் கோடிக்கணக்கில் சொத்துக்கள். அட நம்ம முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல ஏக்கர் நிலங்கள், ஓட்டல்கள் பெங்களூர் மற்றும் புதிய ஏர்போர்ட்டைச் சுற்றித்தான் அமைந்துள்ளன.

மைசூர், ஹாசன், மங்களூரிலெல்லாம் இவர்களுக்குச் சொத்துக்கள் உள்ளன.
கூர்க், ஷிமோகா பகுதிகளில்கூட சொத்துக்கள் வைத்துள்ளனர் சில தமிழர்கள்.

பெங்களூரிலிருந்து ஹாசன் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரஜினிக்கு பல பேக்டரிகள், சந்தன எண்ணெய் ஆலைகள் இருப்பதாக பலர் கூறிய வண்ணம் உள்ளனர். நாம் விசாரித்தவரையில் ரஜினி நேரடியாகத் தொடர்புடைய எந்த ஆலையும், அலுவலகமும் அங்கில்லை என்பதே உண்மை.

வேண்டுமானால் சில தொழில்களில் பங்குதாரராக இருக்கலாம். அதுகூட நமது யூகம்தான். ஆனால் பங்குதாரர் ஆவது அத்தனை பெரிய பாவ காரியம் அல்ல. அது ஒரு சாதாரண விஷயம். ஒரு லட்ச ரூபாய் இருந்தால் நீங்களும்கூட கர்நாடகத்தில் பிரபலமாயிருக்கும் பல கம்பெனியின் ஷேர்களை வாங்கி பங்குதாரராகி விட முடியும்.

சில இடங்களில் ரஜினி நிலம் வாங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். கர்நாடகத்தில் சரத்குமாருக்கு இல்லாத நிலமா!

பெங்களூர் போனால் இப்போதும் ரஜினி தங்குவது இந்திரா நகரில் உள்ள ஒரு சாதாரண பிளாட்டில்தான். அங்கு ரஜினிக்கு துணை ஒரேயொரு உதவியாளர். ரஜினி இங்கு வருவதும் போவதும்கூடத் தெரியாது என்கிறார்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

ஆனால் ரஜினி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை தமிழகத்தில்தான் முதலீடு செய்துள்ளார். ஆனால் அவை எல்லாமே மிக நாணயமான முதலீடுகள் என்பதைத் தெரிந்து கொண்டால் போதும், பொது வாழ்க்கைக்கு அவர் எந்த அளவுக்குத் தகுதியானவர் என்பதைப் புரிந்து கொள்ள...

அதெல்லாம் கிடக்கட்டும்...

ரஜினி அங்கே நிலம் வாங்கினார்... இங்கே இடம் வாங்கினார்... அவர் பதிவு அலுவலகம் போகாமல் வீட்டிலிருந்தபடியே பத்திரப் பதிவு செய்தார் என்றெல்லாம் டெஸ்க் ஒர்க் செய்யும் புலனாய்வுப் புலிகள், கர்நாடகத்தில் ரஜினிக்குச் சொந்தமான ஏதாவது ஒரு தொழிற்சாலைக்காவது ஆதாரம் தந்திருக்கிறார்களா...

உண்மையில் அப்படி ரஜினிக்கு கர்நாடகம் முழுக்க சொத்துக்கள் இருந்திருந்தால், பேனைப் பெருமாளாக்கும் கலையில் வித்தகர்களான இவர்கள் எப்படியெல்லாம் எழுதிக் கிழித்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் (காஷ்மீர் தவிர- அதைக் கேட்க ஒரு பயலுக்கும் துப்பில்லை!). சட்டம் அதனை அனுமதிக்கிறது. அந்த சட்டத்தை வைத்துக் கொண்டுதான் தமிழ் பணக்காரர்கள் மற்ற மாநிலங்களில் சொத்து வாங்கிக் குவிக்கிறார்கள். ஆனால் ரஜினி மட்டும் தமிழ்நாட்டு பார்டரைத் தாண்டக்கூடாது...

நல்ல நியாயம்...

இதுவல்லவா வந்தாரை வாழவைத்துக் கிழித்த உத்தம தமிழ்க் குணம்!

ரஜினி... அரசியல்... எச்சரிக்கை!


மீண்டும் ஒருமுறை மீடியா தனது ஊக வர்த்தகத்தைத் தொடங்கிவிட்டது, சூப்பர் ஸ்டார் ரஜினி விஷயத்தில். இந்த முறையும் தினமலர்தான் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

ரஜினி, இயந்திரன் – தி ரோபோ ஷூட்டிங்குக்கு அமெரிக்கா போய்விட்டதால், அடுத்த ஒருமாதத்துக்கு செய்திகள் வேண்டுமே. அதற்கான ஏற்பாடுகளில் இப்போதே இறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

எப்படியிருந்தாலும், ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வியை எழுப்பி, மீண்டும் அவரைப் பற்றிய பல்வேறு பரபரப்புகளை உயிருடனே வைத்திருக்க பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளன பத்திரிகைகள். அதற்கான முதல் கல்லை இந்த முறை தினமலர் அடித்துள்ளது. அவர்களைப் பொறுத்தவரை வந்தால் மாங்காய், போனால் வெறும் கல் அவ்வளவுதான்.
இங்குதான் ரசிகர்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம், இயந்திரன் ரிலீஸ் வரை இதுபோல பயங்கரமாக உசுப்பி விட்டுக் கொண்டே இருப்பார்கள். ரஜினியும் வழக்கம் போல மவுனமாகவே இருப்பார். சரியாக படம் வெளிவரும் தருணம் பார்த்து தங்கள் சதி வேயை அரங்கேற்றத் தொடங்கிவிடுவார்கள்.

ரசிகர்களும் ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று ஒருகணம் மயங்கிப் போகிறார்கள். குசேலனுக்கு நடந்தது அதுதான்.

படம் ரிலீஸ் ஆகும் வரை இவர்கள் கொடுத்த பப்ளிசிட்டி என்ற, பாஸிட்டிவ் ரிப்போர்ட்ஸ் என்ன... அதே படம் வெளியாவதற்கு ஒரு இரவு முன்பு மொத்தமாகக் கவிழ்த்தார்கள்.
ரஜினி மன்னிப்பு கேட்டார் என்ற பொய்யை, சர்வ நிஜம் போலவே பேசி வைத்துக் கொண்டு வெளியிட்டு பல தீவிர ரசிகர்களையும் கூட நம்ப வைத்தன இதே தினமலர், தினகரன் நாளிதழ்கள்.

தன் பேச்சு குறித்து மக்களுக்கு ரஜினி அளித்த விளக்கத்துக்கு மன்னிப்பு முகம் மாட்டி ரஜினியை தமிழ் விரோதி போலவே சித்தரித்தார்கள். அஞ்ஞானிகள், பார்நிவேதாக்கள், மொட்டைக் கடிதாசி நிபுணர்களெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு வந்து தங்கள் வக்கிரத்தைக் கொட்டினார்கள்.

அதனால் இந்த கயவர்களிடம் இம்முறை கவனம் தேவை!

சரி... தினமலர் செய்தியில் எந்த அளவு உண்மை...?

ரஜினி மன்றத் தலைவர் சத்தியநாராயணாவை பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் சமீபத்தில் சந்தித்தது உண்மை என்பதை ராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகிகள் உறுதிப்படுத்தினர். அதுமட்டுமல்ல, அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்களையும் நான்கு தினங்கள் சந்திக்கப் போகிறார் ரஜினி, அக்டோபர் மாதத்தில்.

‘இப்போ இந்தச் செய்தி வெளியில் கசிவதில்கூட ஒரு ஆபத்திருக்கிறது. இயந்திரன் படத்துக்காக இப்போதிலிருந்தே ரசிகர்களை உற்சாகமாக்க ஆரம்பித்துவிட்டார் ரஜினி என்றெல்லாம் விமரிசனங்கள் வரும். ஆனால் இம்முறை சார் அவர்களுக்கு ஒரு மெஸேஜ் வைத்திருக்கிறார். நிச்சயம் அது ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தும். மற்றபடி எந்தச் செய்தியையும் நம்பாதீர்கள். சார் சொல்வதுதான் உண்மையான செய்தி... மற்றதெல்லாம் இவர்களாகவே இட்டுக் கட்டிக் கொள்வதுதான்..’ என்கிறார் சத்தியநாராயணா.

நூறு சதவிகிதம் வாஸ்தவமான வார்த்தைகள்!