இந்தப் பதிவைப் படிக்கும் முன்... ஒரு சின்ன வேண்டுகோள்!
ரஜினி –கமல் இருவரில் யார் உசத்தி என்று அலசுவதற்கல்ல இந்தப் பதிவு. இந்த இருவரும் நண்பர்களாகவே இருந்தாலும், உண்மையில் யார் முதலிடத்திலிருக்கத் தகுதியானவர் என்பதை அலசும் பதிவு இது. இதற்கென்ன இப்போது அவசியம் என்பவர்கள் மேலே தொடருங்கள்.
கமல் ரசிகர்களும் படியுங்க... நியாயம் புரியும்!இப்போது பெரும்பாலான பத்திரிகைகள், இணைய தளங்களை சற்றே கூர்ந்து நோக்குபவர்கள், மீடியா... இல்லையில்லை... பத்திரிகையாளர்களின் வக்கிர புத்தி என்ன என்பதை வெகு எளிதாக உணரலாம்.
இதுவரை – கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் – ரஜினி – கமல் என்று எழுதப்பட்டு வந்த Ranking-ஐ திருப்பிப் போட முயற்சித்து வருகிறார்கள், ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல!
மேலோட்டமாகப் பார்க்கிறபோது இதில் என்ன இருக்கிறது இந்த அளவு அலட்டிக் கொள்ள... இந்த இருவருமே ஒரே அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள்தானே... என்று சிலர் கேட்கக் கூடும்.
அதற்கு ஒரு சின்ன விளக்கம்...
சில மாதங்களுக்கு முன், கமல்ஹாசனின் தசாவதாரம் வருமா.. வராதா என்ற சூழலை மீடியா உருவாக்கிருந்த நேரம் அது. சிவாஜி தந்த வெற்றியில் எங்கும் எதிலும் ரஜினி என்ற சூழ்நிலை.
அப்போது, கமல்ஹாசன் தனது நெருக்கமான, சொல்லப்போனால் அந்தரங்கமான காராயதரிசி போன்ற ஒருவரிடம் குறைபட்டுக் கொண்டார் இப்படி... (இது ஜூவி கழுகு டைப் கப்ஸா இல்லை... உயிருள்ள ஆதாரங்களுடன் கூடிய உண்மை!!)
‘என்னய்யா இது... நானும் இவ்வளவு முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். வேணும்னா தோல்விப் படம் தர்றோம்... வித்தியாசமா பண்ண முயற்சிக்கிறேன். மீடியாக்காரங்க நம்மகிட்ட நல்லா பேசறாங்க... நம்ம படத்தைப் பத்தி நல்லாதான் எழுதறாங்க... ஆனா இன்னும் எவ்வளவு நாளைக்கு என்னை இரண்டாமிடத்திலேயே வைத்திருக்கப் போகிறார்கள்? இருபது வருஷமா ரஜினி – கமல்னுதான் எழுதறாங்க... இந்த ரேங்கிங்ல எப்பதான் மாறுதல் வரும்?’
அடுத்த நாளே, கமல் அலுவலகத்திலிருந்து போன் கால்கள் முக்கிய பத்திரிகையாளர்களுக்குப் பறந்தன. கமல்ஹாசனை அவர்கள் தனித் தனிக் குழுவாகப் போய் பார்த்ததும் தசாவதார அல்வா வாங்கி வந்ததும் தனிக் கதை.
சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த மீடியா சந்தர்ப்பவாதிகள், இப்போது தங்கள் விஷமத்தனத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்: சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்காக நீண்ட நாள் காத்திருந்த கமல் அதை தசாவதாரத்தில் பெற்று விட்டார்! (சிஃபி)
இன்னொருவர்: ரஜினி-கமல் என்ற ரேங்கிங்கில் தற்போது மாற்றம். தசாவதாரமும், குசேலனும் இந்த வரிசையை மாற்றிப் போட்டிருக்கின்றன (தினமலர்).
அடுத்தவர்: இனி கமல் Vs ரஜினி! (வாடகை கன்டன்டில் காலம் தள்ளும் எம்எஸ்என், யாஹூ!)இன்னும் இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.
இது நியாயமா... யோசித்துப் பாருங்கள்!சினிமா என்பது கலை என்ற நிலையைத் தாண்டி வெகு காலமாகிவிட்டது. இங்கு வியாபாரம்தான் பிரதானம். அதன்பிறகுதான் கலை... கொலை எல்லாம்.
வியாபாரத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் ரஜினி என்றுமே முதலிடத்தில்தான் நிற்கிறார். முன்பே நாம் சொன்னதுபோல, ரஜினிதான் இன்றைக்கு இந்திய சினிமாவின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார் வெளிநாடுகளில்.
வெளிநாட்டில் நூறு நாட்களைக் கடந்து ஓடியவை ரஜினியின் படங்கள் மட்டும்தான்... மற்ற நடிகர்களின் வெற்றிப் படங்கள் கூட ரஜினியின் சுமாரான படம் என்று மீடியாவால் வர்ணிக்கப்பட்ட படங்களை நெருங்க முடியாது. அப்படி ஒரு சாதனை.
அட... நடிப்பென்று வந்தாலும் ரஜினிக்கு இணை கிடையாது. இன்றும் கூட ரஜினியின் அருமையான நடிப்பாற்றலை வியந்து பேசுகிறார் தங்கர் பச்சான். அவருக்கு மிகப் பிடித்த இரு படங்கள் அண்ணாமலை மற்றும் பாட்ஷா.
ஒரு ஆக்ஷன் ஹீரோ அழுதால்கூட ரசிக்க முடியும். ஆனால் ஒரு ரொமான்டிக் ஹீரோ சண்டை போட்டால்கூட அது டான்ஸ் மாதிரிதான் தெரியும் – இது நான் சொல்வதல்ல... நடிப்புச் சக்ரவர்த்தி என ரஜினி புகழும் அமிதாப்பச்சன் சொன்னது!
இன்றும் இயக்குநர் விக்ரமன் பிரமிப்போடு இப்படிக் கூறுகிறார்:
என்னுடைய வானத்தைப் போல படம், ரஜினி சாரின் படையப்பாவை முந்தியதாக குமுதத்தில் ஒரு செய்தி போட்டார்கள். அதை உடனே மறுத்து அறிக்கை கொடுத்தேன். காரணம் படையப்பா வசூலில் 20-ல் ஒரு பங்குதான் வானத்தைப் போல. இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
அதே போல.. பாபாவை ஒரு தோல்விப் படமென்று என்னால் ஒருபோதும் கூற முடியாது. அந்தப் படத்தில் எல்லா அம்சங்களுமே சிறப்பாக இருந்தன. நியாயமாக ரஜினியின் ரசிகர்கள் அதை நன்றாக ஓட வைத்திருக்க வேண்டும். பத்திரிகைகளில் வருவதை மட்டுமே நம்பிக்கொண்டு, படத்துக்கு போதிய ஆதரவளிக்காமல் விடுபவர்கள் எப்படி அவரது தீவிர ரசிகர்களாவார்கள்? சொல்பவர்கள் பேச்சைக் கேட்காமல் யோசித்துப் பார்த்தால் புரியும் நான் சொல்வது...
பாபாவுக்கு பணத்தை ரஜினி சார் திருப்பித் தந்தார் என்ற செய்தி எனக்குக் கிடைத்த போது மிகவும் வருத்தப்பட்டு ரஜினி சாரிடம் என் உணர்வுகளைச் சொன்னேன். நான் இந்த அளவு பேசக் காரணம், அடிப்படையில் ரஜினி சாரின் அத்தனை படங்களும் குடும்பம் சார்ந்தவை. குடும்பத்தோடு பார்த்து மகிழக் கூடியவை... ரஜினியோடு நான் யாரையும் ஒப்பிட மாட்டேன். அவர் வழி தனி வழி... அவர் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான்!”
-என்ன செய்வது... சினிமாவிலேயே இருக்கிற ஒருவருக்குத் தெரிந்ததை விட, தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என பிதற்றும் ஒரு கும்பல் இப்போது கமல் – ரஜினி என எழுத ஆரம்பித்துள்ளது.
இன்றைக்கு ரஜினி கவுர வேடத்தில் தோன்றிய ஒரு படத்தை சதி செய்து, உண்மைகளை மறைத்து தோல்விப் படமாகக் காட்டிவிட்டதால் அவரது மதிப்பு குறைந்துவிடுமா... அல்லது வசூல் சக்கரவர்த்தி அந்தஸ்து இறங்கிவிடுமா...
குசேலன் படத்தில இப்போதும் பிரமிட் சாய்மிராவுக்கு லாபம்தான். இதை எப்போதும் சொல்ல முடியும், எங்கேயும் சொல்ல முடியும். ஒரு சில தியேட்டர் உரிமையாளர்கள் பொய்க் கணக்கு காட்டி நஷ்டஈடு வாங்குவதில் குறியாக இருக்கிறார்கள். (இவர்களும் அடுத்த ரஜினி படம் வெளியாவதற்குள் தியேட்டர்களை சாய்மிராவுக்கோ ஆட்லேப்ஸூக்கோ விற்றுவிட்டு ஓடப் போகிறவர்கள்தான்.)
அதனால் இந்த ஜுஜுபி மேட்டருக்காக ரஜினியை ஒரு படி இறக்கி, தகுதியில்லாத ஒருவரை மேலேற்றப் பார்ப்பது என்ன நியாயம்?
ஆளவந்தான் தொடங்கி, மும்பை எக்ஸ்பிரஸ் வரை வெளியான கமலின் தோல்விப் படங்களுக்காக அவரை ஒவ்வொரு படியாக இறக்கிக் கொண்டே போயிருந்தால், இன்று தமிழ் சினிமாவின் கடைசிப் படியில் அல்லவா நின்று கொண்டிருந்திருப்பார் கமல்ஹாசன்!
23 comments:
'நகைச்சுவை /நையாண்டி' -ன்னு சரியாத் தான் வகைபடுத்தியிருக்கீங்க.. சபாஷ்!
என்ன வெளயாட்டு இது?
யாரு யாரோட?
பி.யூ. சின்னப்பா - எம்.கே.டி, எம்.ஜி.ஆர். - சிவாஜி, அப்படீன்னு ரெண்டு பேரு இருந்ததால ரஜினி - கமல் அப்படீன்னு கெளப்பி விட்டாங்க.
எப்போ வரிசையா தோல்விப் படங்களை மட்டுமே கொடுக்க தெரிஞ்சதோ அப்பவே ரெண்டாவது ஆள கழட்டி விட்டாச்சு. போனா போகுதுன்னு நம்ம ஆளு தான் 'நண்பரு' அது இதுன்னு பில்டப் கொடுத்து வெச்சுகிட்டாரு. அவரும் 'இவரு போவேன்னாரு, நான் தான் அப்போ எனக்கு போட்டி வேணும்னு இருக்க சொன்னேன்னு' ஒரு வழிசல் வழிஞ்சு பேட்டியெல்லாம் கொடுத்து, கண்றாவி!
நம்பர் 1 இப்போ தலைவருக்கு மட்டும் தான்.
அப்படியே அடுத்ததா வந்தா நம்பர் 2, நம்பர் 3 எல்லாமே காலி. நம்பர் 1001க்கு அப்புறம் வேணும்னா விஜய், விஷால், விக்ரம் அப்படீன்னு வி நடிகர்களை சொல்லலாம்!.
இதிலே மேற்படியாரு எங்க இருக்காருன்னு எல்லாம் கஷ்டப்பட்டு தேட வேண்டாம்.
ஜோக் என்னான்னா, மக்கள் ரசிக்கிர மாதிரியான படங்களே தராம தொடர்ந்து தோல்விப் படமாவே தந்திட்டிருக்கிறதை கூட ஒத்துக்காம, "அதெல்லாம் தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சி"ன்னு அல்லக்கைகள் ஜல்லியடிக்க்றாங்க பாருங்க. தாங்க முடியலப்பா.
அடுத்த கட்டம் தான், அதாவது அத்தனை தயாரிப்பாளருக்கும் துண்டு.
ஆஸ்கர் அவார்டு வாங்கி தருவாராம். அடேய், ஆஸ்கார் ரவிச்சந்திரனோட கம்பெனி பேர கூட காப்பாத்த முடியல. பேசுறானுங்க!
"ஆளவந்தான் தொடங்கி, மும்பை எக்ஸ்பிரஸ் வரை வெளியான கமலின் தோல்விப் படங்களுக்காக அவரை ஒவ்வொரு படியாக இறக்கிக் கொண்டே போயிருந்தால், இன்று தமிழ் சினிமாவின் கடைசிப் படியில் அல்லவா நின்று கொண்டிருந்திருப்பார் கமல்ஹாசன்! "
This summarises the entire post.
In the last Eng-Vs-India cricket series only one Indian had scored a century in the whole series. And it was not a batsman, but Anil Kumble the bowler. No doubt Kumble is one of the greatest cricketers India has ever produced. But, based on that one century, you cannot claim that Kumble has overtaken Tendulkar or Dravid or Ganguly or other batsmen in batting.
But, Rajini has now gone beyond the number games. Whatever the vernacular press try, they can't try to force their opinion on the whole world.
Outside TN, people know Rajini more than Kamal or other TN stars.
நன்றி திரு.ஜோ, மாயவரத்தான் மற்றும் ஷரத்...
இன்றைக்கு ஒரு கூட்டமே இந்த விஷ வித்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. உங்களுக்கும் கூடத் தெரிந்திருக்கும். முடிந்தவரை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காவது சில விஷயங்களைத் தெளிவாக்குவோமே!
நன்றி திரு.ஜோ, மாயவரத்தான் மற்றும் ஷரத்...
இன்றைக்கு ஒரு கூட்டமே இந்த விஷ வித்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. உங்களுக்கும் கூடத் தெரிந்திருக்கும். முடிந்தவரை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காவது சில விஷயங்களைத் தெளிவாக்குவோமே!
good post and that is why kamal says i will act in movie produced by rajini and rajini will act in a movie produced by him.
ஒரு கல்லில் இரண்டு மாங்கா என்பது இது தான்
pradeep
Friends,
Good post. Evem the statementto take the Tamil cinema to the nextlevel -commercially is only by Rajini before Sivaji there was no such graze for tamil movies, even for Chandramukhi not a hype I live out of the country for about close to 5 years.
Now many of the north indian guys and indian origin people from Trinidad, gayana all know Rajini and were produly recalling roots either as I am also from "SOUTH".
I would also like to add couple of points. The two leading magazines keep bashing super star now a days. These guys are typical business people. Do not blame them. Their editors are NOT responsible. In one way they are also like super star. Super star survived 30 years in this field, reason is he refined himself over the period of his career when ever taste and trend of the audience got changed. These two magazines also survived for a quite long time. They also refined them self and published content according to the taste of the people through out their survival time. As I posted in www.onlyrajini.com there are few thousand smart people( They like some some one from Tamil Nadu to become a CM) who has financial background trying to get rid of super star. They try to accomplish the job through this magazines. Thats why all the magazines are against super star now. So we have to blame who owns them and who is funding for them. They just now started the negative propaganda and wait and see, down the line they will try to erase him from TN. After Mr.Kalignars period media will nail him down to earth, because he is THE crowd puller for TamilNadus future.
What is the meaning of a best actor? If any actor who has the talent to keep the audience for 2 and half hours is the best actor. You do not need to reduce your wait, come up with 20 characters to please the public and burnt producers wallet. In that context super star is the best actor along with kamal too. But Kamal is more talented than super star and here no one is worrying about who has the more talent. In Holly wood there are many movie distributing companies, funded by wall street. So they have enough budget for some non profit movies where couple of directors could try out some classic movies and they get nominated for Oscar. We do not have that funding in Chennai and why he tries out his experiment in others money? All these days kollywood has been funded by individual investors and super star knows the business model and succeeded. He knows the business very well and he is more smart and thats why he is a super star now. He has survived for 30 years, that means every 5 years people taste gets changed and when ever he sees a slight down trend in his career he took the opportunity, refine him self and come up. That includes changing stories, plot, directors, so and so. He knows the secret and thats why he is a super star now. After movies like Shiva, Pandian, Arunachalam, Baba and now Kuselan he refined him self. These movies and the media bash gave him wonderful opportunity to refine himself and that makes him to go to the next level. But medias intension is not to refine him and super star takes it in positive way. If the media nailed kamal like super star he must have been out of Tamil cinema long back. As far as I know the last super hit he gave was Sakala Kala vallavan and Tevarmagan.
Also the trend has changed now and Kamal is in nice hands now. He needs some one to fund and now Tamil Cinema is with the hands of corporate companies now. They can survive the loss easily. Since all the Kamals upcoming coming projects are funded by corporate, he will get projected like super star from now on( Good opportunity for those who wanted to erase super star from Tamil Cinema also). Corporate funding project is pretty new to super star now. Lets see how he survives this corporate dominated trend. Since I do not believe in god so I can not pray for super star. A person who survived thirty plus years and refined himself according to the taste and trend, this would be not a cake walk but I am pretty sure he will come up. Reason is he knows THE SECRET and his name SUPER STAR proves.
PTB
"ஆளவந்தான் தொடங்கி, மும்பை எக்ஸ்பிரஸ் வரை வெளியான கமலின் தோல்விப் படங்களுக்காக அவரை ஒவ்வொரு படியாக இறக்கிக் கொண்டே போயிருந்தால், இன்று தமிழ் சினிமாவின் கடைசிப் படியில் அல்லவா நின்று கொண்டிருந்திருப்பார் கமல்ஹாசன்! "
ஜோக் என்னான்னா, மக்கள் ரசிக்கிர மாதிரியான படங்களே தராம தொடர்ந்து தோல்விப் படமாவே தந்திட்டிருக்கிறதை கூட ஒத்துக்காம, "அதெல்லாம் தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சி"ன்னு அல்லக்கைகள் ஜல்லியடிக்க்றாங்க பாருங்க. தாங்க முடியலப்பா.
அடுத்த கட்டம் தான், அதாவது அத்தனை தயாரிப்பாளருக்கும் துண்டு.
ஆஸ்கர் அவார்டு வாங்கி தருவாராம். அடேய், ஆஸ்கார் ரவிச்சந்திரனோட கம்பெனி பேர கூட காப்பாத்த முடியல. பேசுறானுங்க!
------'மைக் மோகன்' இடம் பதிநைந்து ஆண்டுகள் ரொம்ப சிரமப்பட்டு போட்டியிட்ட 'ஒலகநாயகன'!! --------'மைக் மோகன்' படங்கள் ஒகோன்னு ஒடியப்பகூட ஒலகத்தரம் ஒ......தரமாத்தான் இருந்திச்சி..... நம்ம சூப்பர் ஸ்டாராகூட ஒப்பிடாதீங்க ப்பிளீஸ்.. செய்யும் தொழிலிலும் , வெளியிலும் சூப்பர்ஸ்டாருக்கு இணையா யாரையாவது சொல்லுங்க அல்லது அவர விட பெட்டரா இருக்கிறவங்கள பத்தி சொல்லுங்க! இந்த மைக் மோகன் கூட பொட்டியிட்டு தோற்றவனுங்கள நம்ம பிளாக்கில போடாதீங்க..
அடுத்த கட்டம் தான், அதாவது அத்தனை தயாரிப்பாளருக்கும் துண்டு.
ஆஸ்கர் அவார்டு வாங்கி தருவாராம். அடேய், ஆஸ்கார் ரவிச்சந்திரனோட கம்பெனி பேர கூட காப்பாத்த முடியல. பேசுறானுங்க!
-----------------------------------
Mayavarathaan - Idhu thaan super SIXER
Absolutely... இந்த விஷயத்தில் உலக்க நாயகனை ஒருத்தரும் அசைச்சுக்க முடியாது, அசைச்சுக்க முடியாது!
தமிழ் தயாரிப்பாளர்களுக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் கலைஞானி அவர்!
இந்த மீடியாக்கள் மோகன்,ராமராஜன்,விக்ரம், விஜய்,தனுஷ்... வரை சூப்பர் ஸ்டார் ஆக்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது.
கமல் தற்போது டாப் கேட்டகரியில் இல்லை. அவர் முதலில் டாப் கேட்டகரிக்கு வரட்டும். பிறகு ரஜினிக்கு அடுத்த இடமாவது கமலுக்கு கிடைக்குமா என பார்ப்போம்.
உதாரணம் ரஜினியின் கெஸ்ட் ரோல் படமான குசேலன் திருச்சியில் 3 தியேட்டர்களில் ரிலிஸ் ஆனது. கமல் படம் எத்தனை தியேட்டரில் ரிலிஸ் ஆனது யோசித்து பார்த்தால் அவருக்கு எத்தனையாவது இடம் என்பது தெரியும்.
// அட... நடிப்பென்று வந்தாலும் ரஜினிக்கு இணை கிடையாது.
அவருக்கு மிகப் பிடித்த இரு படங்கள் அண்ணாமலை மற்றும் பாட்ஷா.///
best comedy,, hahahahaha
நல்லாவே சிரித்தேன் . ஏன்யா இப்பிடி எல்லாம் காமெடி பண்ணறிங்க?
RAGU - PUNE
பாபாவை ஒரு தோல்விப் படமென்று என்னால் ஒருபோதும் கூற முடியாது.
HAHAA.. NEENGA YAARU EPDI PATTAVARNU THERIYUTHU..
KEEL PAAKAM ADDRESS THERIYUMA?
PRIYA - DENMARK
பேசாம போயிடு... ஏதாவது அசிங்கமா திட்டிடப் போறேன். பிளாக் என்றாலும் முடிந்தவரை கண்ணியமாக நடத்த முயற்சிக்கிறேன்!
//அதே போல.. பாபாவை ஒரு தோல்விப் படமென்று என்னால் ஒருபோதும் கூற முடியாது. அந்தப் படத்தில் எல்லா அம்சங்களுமே சிறப்பாக இருந்தன. நியாயமாக ரஜினியின் ரசிகர்கள் அதை நன்றாக ஓட வைத்திருக்க வேண்டும். பத்திரிகைகளில் வருவதை மட்டுமே நம்பிக்கொண்டு, படத்துக்கு போதிய ஆதரவளிக்காமல் விடுபவர்கள் எப்படி அவரது தீவிர ரசிகர்களாவார்கள்? சொல்பவர்கள் பேச்சைக் கேட்காமல் யோசித்துப் பார்த்தால் புரியும் நான் சொல்வது...//
Ungalukku puriyaathathu rajini rasigargalukku nalla purinjiduchu.. atha naala thaan baba odalai.. .kuselanum odalai :-)
sirantha padatha mathavangala 1001 vathu edathula vachirukkira olaga maga superstar kku kooda vetri pera vaikka mudiyalaiyaa...
logic idikkuthey !
appo pathirikkai ezuthitta unga aalu no 1 illaya ??
ennamoe ponga
thangar pachan viyakkum, rajinikku, 30 years nadikkum rajinikku en ore oru national award kooda kidaikkavillai??
ஆஹா... என்ன அருமையான அனானி(அஞ்ஞானி) நீங்கள்... மாதம் மும்மாரிப் பொழியும்... நல்லா இருங்க நண்பரே... நன்றி!
என்னடா இன்னும் உங்க திருப்பணி ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன்... மிஸ்டர் சில்லு...
நான் எந்த இடத்திலேயும் சிறந்த நடிகர் விருது வாங்குவதுதான் சிறந்த நடிகருக்கான அடையாளம் என்று கூறவேயில்லையே...
ஒரு சின்ன விஷயம்.
இந்தியாவின் மிகச் சிறந்த இசை மேதை ஆர்டி பர்மனுக்குக் கடைசி வரை சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைக்கவே இல்லை.
உலகின் மிகச் சிறந்த பாடகர் வரிசையில் போற்றப்படும் கிஷோர் குமாருக்கு சாகும் வரை சிறந்த பாடகர் விருது கொடுக்கக் கூட இந்திய அரசு முன்வரவில்லை.
அட... சிவாஜி கணேசனுக்கே சிறந்த துணை நடிகர் விருதுதானே கொடுத்தார்கள்...
நன்றி!
Devanand..
Hi..if u want more info on Baba..a so called flop..
it grossed total of 21 crore rupees..
Blockbuster Ghilli grossed 18 crores, tat too with higher ticket prices..
A so-called flop of rajni does more business than a blockbuster of a year..
plz guys..Rajni's plane s different..
Others plane s different..somewer below...
kamal..his pit s still different..
kamal kiss adika than pa layaku..
Thank You very much for your positive comment Dev...
Rajini always The Sun... no need to compare other tiny stars with him... I just posted that to expose Kamal's greedy face...
Post a Comment