Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, December 1, 2008

எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்

75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தருவதிலும், குழந்தைகளையும் கவரும் தனித் தன்மையிலும் அமரர் எம்ஜிஆருக்குப் பின் சிறந்து விளங்குபவர் ரஜினி மட்டும்தான் என்கிறார் கார்ட்டூனிஸ்ட் மதன்.

மதனின் ஒவ்வொரு கோடுகளுக்கும் தனி அர்த்தம் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் உண்டு. ரஜினி என்ற மாபெரும் கலைருக்குள் உள்ள கலை, அரசியல், மனிதாபிமானம் பற்றி, இன்றைய பத்திரிகையாளர்களில் அதிகம் தெரிந்தவர் மதன்.

அது மட்டுமல்ல, பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் தலைக்குப் பின்னால் ஏதோ ஒரு ஒளிவட்டம் சுழல்வதாக தலைக் கனத்துடன் பேசித் திரியும் இன்றைய சூழலில் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர் மதன். ஒரு நல்ல ரசிகர், நல்ல எழுத்தாளரால்தான் இப்படி மனம் திறந்து பாராட்ட முடியும் என்பதால் இதைக் குறிப்பிடுகிறேன். (அவரது முகாம், அவர் வளர்ந்த பின்னணி குறித்தெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை.)

ரஜினி பேரக் கேட்டாலே... எனும் தலைப்பில் தமிழில் டாக்டர் காயத்ரி எழுதிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் நேற்று மாலை சவேரா ஓட்டலில் வெளியிடப்பட்டது.

கவிஞரும் திமுக எம்பியுமான கனிமொழி கருணாநிதி முதல் பிரதியை வெளியிட, எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்டுமான மதன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த விழாவின் சிறப்பம்சம் மதன் மற்றும் எஸ்பி முத்துராமனின் சிறப்பான பேச்சுதான். ரஜினியைப் பற்றி எந்தவித அலங்காரங்களும் இல்லாத அவர்கள் பேச்சு உண்மையிலேயே நிறைவாய் இருந்தது. மற்றபடி இந்த விழாவில் சில நெருடல்களும் உண்டு. அதை பின்னர் பார்க்கலாம்!

மதன் பேச்சிலிருந்து...
நடிகரின் வாழ்க்கை வரலாறு என்றதுமே சிலர் ஆஹா என்பார்கள். இன்னும் சிலர் ஓ என்ற சின்ன பார்வையுடன் நகர்ந்து விடுவார்கள். எழுதுபவருக்குப் புகழ் கிடைத்தாலும், அவர் எழுத்துக்கு பெரும்பாலும் அங்கீகாரம் கிடைக்காது.

இதற்குக் காரணம் ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல்கள். அதாவது ரெண்டுவித சிக்கல்கள் இருக்கு. பெரும்பாலும் ஏதாவது ஒரு சினிமா பத்திரிகை நிருபர் தனி வேலையாக அதை எடுத்துக் கொண்டு எழுதுவார். அதில் பெரும்பாலும் உண்மைகள் விடுபட்டு, வெறும் புகழ்ச்சிதான் மேலோங்கியிருக்கும். ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை அவரது தொண்டர்கள் யாரேனும் எழுதினாலும் இந்த நிலைதான்.

இன்னொன்று பிரபல எழுத்தாளர்கள் எழுத முன்வருவதில்லை. அப்படியே எழுதினாலும் அதில் விமர்சனம் நிறைந்திருக்கும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலைப் போக்கில் எழுதப்படும் வாழ்க்கை வரலாறுகள்தான், நல்ல பதிவுகளாக அமையும்.

இந்தப் புத்தகம் அப்படிப்பட்டதுதான். நன்றாக எழுதியிருக்கிறார் காயத்ரி. ரஜினியின் வயதுக்கேற்ப அந்தஸ்து அதில் தரப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு அவரது சிறுவயது பருவ நிகழ்வுகளில் சிறுவன் ரஜினிதான். அதில் சிறப்பு மரியாதை கிடையாது. சூப்பர் ஸ்டாராக வந்த பிறகு அதற்குரிய மரியாதையோடு விளித்து எழுதியிருப்பது இந்த நூலுக்கு தனி நம்பகத் தன்மையைத் தருகிறது.

ரஜினியைப் பற்றி நிறைய சொல்லலாம். அவரை நான்கு முறை சிறப்பு நேர்காணல் செய்த பெருமை எனக்குண்டு. ஆனால் அதைப் பற்றி பேசும் மேடை இதுவல்ல.

தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் காலத்துப் பாடல்களை இன்றும் கூட கேட்டு ரசிக்கலாம். அதற்குப் பிறகு எம்ஜிஆர்தான் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தந்தார். இப்போது பார்த்தாலும் அவரது படங்கள் மிகச்சிறந்த பொழுதுபோக்காக அமைந்துள்ளன. அவருக்குப் பிறகு அந்த மேஜிக் கைவரப் பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. அதையும் தாண்டிய பல பரிமாணங்கள் ரஜினி அவர்களுக்கு உண்டு.

வெளிநாடுகளிலும் ஒரு நடிகரைப் பற்றி பல புத்தகங்கள் வருகி்ன்றன. ஆனால் இங்கே அப்படி இல்லை. ரஜினியைப் பற்றி எப்போதோ இந்த மாதிரி புத்தகங்கள் வந்திருக்க வேண்டும். டாக்டர் காயத்ரி போன்றவர்கள் ரஜினியைப் பற்றி இன்னும் பல கோணங்களில் புத்தகங்கள் எழுதலாம். ஒரு ஞாயிற்றுக் கிழமையை இதற்காக ஒதுக்கி ரஜினியுடன் சில மணிநேரங்கள் உரையாடி, அதையே புத்தகமாகவும் கொண்டுவரலாம்.

அப்படிச் செய்யும்போது, ரஜினியைப் பற்றியும், அவரது எண்ணங்கள் பற்றியும், மக்களின் ரசனை குறித்தும் மக்களுக்குத் தெரியவரும், என்றார்.

- வினோஜாஸன்
http://www.envazhi.com

Friday, September 5, 2008

ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்! - 'இப்ப என்னங்கடா செய்வீங்க'!!


தன்னைப் பார்த்து குரைப்பவர்களைப் பற்றிக் கவலைப் படாமல், உலக அளவில் ஒரு பிரமாண்டப் படத்தை உருவாக்கும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
இயந்திரன் - தி ரோபோ என தமிழ்ப் படத்துக்குத் தலைப்பு வைத்திருக்கும் ரஜினியும் இயக்குநர் ஷங்கரும், இதன் தெலுங்கு மற்றும் இந்தி வடிவங்களை ரோபோ எனும் பெயரிலேயே வெளியிட முடிவு செய்துள்ளனர். ஷாரூக்கான் 9 தலைப்புகளைப் பதிவு செய்திருந்தாலும், அவை ஷங்கர் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருக்கும் தலைப்புக்கு சம்பந்தமில்லாதவை என்றே கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கமும் தி ரோபோ எனும் பெயரிலேயே ரிலீசாகப் போகிறதாம்.

இனி படம் குறித்து ஷங்கர் அதிகாரப்பூர்வமாக இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கை:

இயந்திரன் – தி ரோபோ: இந்தியாவின் முதல் சர்வதேசப் படம்!

முழுக்க முழுக்க ஹாலிவுட்டில் தயாராகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையுடன் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளில் படப்பிடிப்பு துவங்குகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இயந்திரன் – தி ரோபோ (நேற்று எந்திரம் என்று குறிப்பிட்டிருந்தோம். அது இயந்திரன் என மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் ஷங்கரின் மீடியா மேனேஜர் நிகில்!) படத்துக்காக.
இந்தப் படத்தில் பணியாற்றுபவர்களில் பாதிக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஹாலிவுட்டில் பெரும் வெற்றிப் படங்களில் பணியாற்றியவர்கள் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இன்று ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மென் இன் பிளாக், பேட்மென்ஸ் ரிட்டர்ன், இன்ஸ்பெக்டர் காட்கெட்ஸ் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் மேரி இ வோக்ட், ரோபோவின் காஸ்ட்யூமராகப் பணியாற்றுகிறார். இவருடன் இந்தியாவின் நம்பர் ஒன் காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவும் இணைகிறார்.

இயந்திரனுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளைச் செய்யப் போகிறவர்கள் ஹாவலிவுட்டின் நெம்பர் ஒன் ஸ்டுடியோ எனப்படும் ஸ்டான் வின்ஸ்டன். இவர்கள்தான் டெர்மினேட்டர், டெர்மினேட்டர் -2, ஜூராஸிக் பார்க், பிரடேடர், பியர்ல் ஹார்பர், சமீபத்தில் உலகைகே கலக்கிய அயர்ன் மேன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு மிரட்டலான கிராபிக்ஸ் பணிகளைச் செய்தவர்கள். இந்தியப் படம் ஒன்றில் இவர்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறை.

படத்துக்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் தர ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்கள் ஐஎல்எம், கேப் இஎப்எக்ஸ், ஹாங்காங்கின் சென்ட்ரோ, மென்போர்டு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர்கள்.

ஹாலிவுட்டின் எந்தப் படத்துக்கும் சவால் விடும் வகையில் ரஜினியின் இயந்திரனை உருவாக்குவதற்காகவே இவ்வளவு பெரிய முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன்.

‘நிச்சயம் இந்தப் படம்தான் இந்திய சினிமாவின் சர்வதேச முகவரியாக இருக்கப் போகிறது. டெர்மினேட்டரை விட பல மடங்கு மிரட்டலான ஸ்டைல் மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் உலகம் முழுக்க வெளியாகப் போகிறது இயந்திரன்’ –என்கிறார் அவர்.

இனி ரஜினி டார்கெட், உலக மார்க்கெட்!

இந்த பிரமாண்டங்களுப் பின்னணியில் ஒரு முக்கியக் காரணம் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

ரஜினி படங்களின் வீச்சை இந்திய திரை உலகை விட ஹாங்காங், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ரஜினி நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இயந்திரன் என்று கூடச் சொல்லலாம். இந்தப் படத்தின் மார்க்கெட் உலகளாவியதாக இருக்கும். அப்போது தமிழ்நாடு, ஆந்திரா என்று மாநிலம் தழுவிய விற்பனை உரிமை ஒரு பொருட்டாகவே இருக்காது.

தேவையில்லாமல் சிறு விஷயங்களையும் ஊதிப் பெரிதாக்கும் போக்கும் நின்று போகும். எனவேதான் ரஜினி இத்தனை பிரமாண்டங்ககளையும் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் வார்னர் பிரதர்ஸ் உருவாக்கவிருக்கும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திட்டமும் ரஜினிக்கு உள்ளது. அதற்கான வெள்ளோட்டம்தான் இயந்திரன், என்கிறார்கள்.

எப்படியோ, ரஜினியின் படம் ஒன்று முழுக்க முழுக்க ஹாலிவுட் பிரமாண்டங்களுக்கு இணையாகத் தயாராவது ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் வியாபார எல்லைகளையே விரிவடையச் செய்திருக்கிறது என்பதே உண்மை.

ரியலி கிரேட்!

நன்றி: எஸ்சினிமா, தட்ஸ்தமிழ்

Shankar officially announced Enthiran – The Robot!

Here is the official press release of Director Shankar on the forthcoming Grandeur of Superstar Rajinikanth’s Robot (Enthiran – The Robot).
“With Super Star Rajnikanth and Aishwarya Rai Bachan in lead rolls, the film is start rolling on September 8th at America.
The big movie production houses which involved into this grandeur venture are Ayngaran International Films Pvt Ltd. and Eros International.
Two fantastic numbers in A. R. Rahman’s music, is about to shot in beautiful locations of America and surrounding countries.
The other cast and crew: Cinematography R. Ratnavelu. Art: Sabu Cyril, Lyrics: Vairamuthu, Pa. Vijay, Editing: Antony, Choreography: Raju Sundaram, Costume Design: Manish Malhotra.
The Costume Designer of Men in Black, Batman returns, Inspector Gadget Mary E Vogt is designing the scientific outfits.
Stan Winston Studio (USA) who has worked for Predator, Jurassic Park, Pearl Harbor, Iron man, Terminator and I - Robot is doing Animatronics.
Yuen Woo Ping who handled stunt for many Hollywood movies like Crouching Tiger Hidden Dragon, Matrix and Kill Bill is currently working for Endhiran – The Robot.
All the three world renowned people working for an Indian movie is for the first time.
Hollywood companies like ILM, Tippet, Café EFX; and Hong Kong companies like Centro and Menfond are going to work in the field of VFX. Visual Effects and Animatronics co-ordination: Indian Artiste.
K. Karunamurthi and C. Arunpandian produced the film behalf of Ayngaran films international and Eros. K. Vijayakumar is the Executive Producer.

www.rajinifans.com

Thursday, September 4, 2008

இயந்திரன் ஆனது ரோபோ!


சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து ஷங்கரின் நடிக்கவிருந்த ரோபோபடத்தின் பெயர் இயந்திரன் - தி ரோபோ என மாற்றப்பட்டுள்ளது.

இதோ அதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி:

இந்தியாவின் ஷோமேன் எனப் புகழப்படும் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படமான ரோபோவுக்கு, இயந்திரன் – தி ரோபோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிவாஜிக்கு அடுத்து ரஜினிகாந்த்தும் ஷங்கரும் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்யப் போவதாக அறிவித்தனர். அதற்கு ரோபோ என்று தலைப்பும் சூட்டினர். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும், தமிழின் முதல் பிரமாண்ட விஞ்ஞானப் படம் இது.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் (சுமார் ரூ.140 கோடி) அய்ங்கரன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உருவாக்கும் இந்தப் படத்துக்கு பொருத்தமான தமிழ் தலைப்பு சூட்டப்படும் என ரஜினி முன்பு அறிவித்திருந்தார்.

தமிழில் பெயர் வைத்தால் கிடைக்கும் வரிச் சலுகைக்காக இந்தப் பெயர் மாற்றம் இல்லை என்றும், தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என தமிழக அரசின் விருப்பத்தை மதிக்கும் வகையில் இப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் ரஜினி ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இயந்திரா என்ற பெயர் முதலில் பரிசீலிக்கப்பட்டது. பின்னர் இயந்திரன் என மாற்றப்பட்டது. ஆனால் இதில் ரஜினிக்கு அவ்வளவாக திருப்தி இல்லையாம்.
கடைசியில் அவரது யோசனைப்படி இயந்திரன் – தி ரோபோ என இந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 3 போட்டோ செஷன்கள் முடிந்து விட்டன. கடந்த வாரம் அமெரிக்காவில் ஹாலிவுட் ஸ்டுடியோவில் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நாளை மறுதினம் முழு வீச்சில் பிரேஸ்ல் நாட்டில் படப்பிடிப்புத் துவங்குகிறது.

ஏற்கெனவே ரோபோ படப்பிடிப்புக்காக ஷங்கருடைய ஒரு குழு பிரேஸிலில் முகாமிட்டுள்ளது.
ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட குழுவினர் நாளை புறப்படுகின்றனர். படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் நேராக பிரேஸிலுக்கு 7-ம் தேதி வந்து விடுவார் எனக் கூறப்படுகிறது.

நன்றி- தட்ஸ்தமிழ், எஸ்சினிமா