சர்வதேச ரசிகர்களின் இதயங்களை வென்றவர் ரஜினி. வெளிநாடுகளில் ரஜினி ரசிகர்கள் என்று கணக்கெடுத்தால் இதில் மலேஷியா, சிங்கப்பூருக்கு அடுத்து ஜப்பானைத்தான் குறிப்பிட வேண்டும். தாயகத்தில் எப்படி ரஜினிக்கு மன்றங்கள் வைக்கிறார்களோ, அப்படித்தான் அங்கும் மன்றங்கள் வைத்துள்ளார்கள், பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள், இன்னும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.
மேடைகளில் ரஜினியைப் போல வேடமணிந்த இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் ஆடிப்பாடுவது ஜப்பானில் சகஜமான விஷயம்.
தமிழகத்தில் மிமிக்ரி கலைஞர்களுக்கு அமரர் எம்ஜிஆரும், நம்ம தலைவர் ரஜினியும்தான் வாழிவளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே பிழைபுக்காக அல்ல, ஆனால் பொழுது போக்குக்காக மிமிக்ரி செய்யப்படும் ஒரே இந்திய நடிகரின் குரல் நம்ம சூப்பர் ஸ்டாருடையதாகத்தான் இருக்கும்.
கவனிக்கவும்... மலேஷியா, சிங்கப்பூரிலாவது நம் தமிழ் மக்கள் ஏராளமானோர் ரஜினி ரசிகர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்வார்கள் (மகாதீரும் அன்வரும் ரஜினி படத்தை வைத்து ஓட்டுக் கேட்டது தனிக் கதை). ஆனால் ஜப்பானில் ரஜினி போல ஆடிப்பாடுபவர்கள் மற்றும் மிமிக்ரி செய்பவர்கள் ஜப்பானியர்கள்!!
ரஜினி விஷயத்தில் ஜப்பானியர்களின் ஆர்வம் எந்த அளவு இருக்கிறது என்பதை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை மூலம் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.
இதோ அதற்கு சான்றாக ஒரு வீடியோ! (இப்பவே இப்படின்னா... இன்னும் எந்திரன் உலகம் முழுக்க ரிலீஸ் ஆன பிறகு எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பாருங்க!!)
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
1 comment:
இதென்ன பிரமாதம் கிழக்கு ஆப்ரிக்காவிலும், கம்போடியாவிலும் எங்க Gaptainகு எவ்வளவு மவுசு இருக்குனு தெரியுமா. அங்க மட்டும் அவர் கட்சி ஆரம்பிச்சா ஒரே மாசத்துல அந்நாட்டின் அதிபர் ஆயிடுவாரு.
Post a Comment